
சிறிலங்கா அரச பயங்கரவாதத்தின் துணை இராணுவக்குழு அமைப்பினால் சுட்டுக்கொல்லப்பட்ட மாமனிதர் தராக்கி சிவராம் அவர்களின் 17வது ஆண்டு நினைவேந்தல் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

இதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் மகளிர் அணி தலைவி வாசுகி சுதாகர் மற்றும் கட்சியின் உறுப்பினர்கள் செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர்.







