2030ஆம் ஆண்­டுக்­குள் ஒவ்­வோர் ஆண்­டும் 560 உலகப் பேர­ழி­வுகள்: ஐ.நா.எச்சரிக்கை!

0
361

தற்­போது காணப்­ப­டும் பரு­வ­கால மாற்­றங்­கள் கவ­னிக்­கப்­ப­டா­துவிட்டால் 2030ஆம் ஆண்­டுக்­குள் ஒவ்­வோர் ஆண்­டும் 560 என்­கிற அள­வில் உலக நாடு­கள் பேர­ழி­வு­களை நோக்கிச் செல்ல வேண்­டிய நிலை ஏற்­ப­டும் என ஐ.நா. கடும் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது.

உல­கில் மனி­தர்­க­ளின் செயற்பா­டு க­ளால் காபனீரொட்சைட் எனப் ப­டும் கரி­ய­மில வாயு வெளி­யேற்­றம் அதி­க­ரித்துள்­ளது. இத­னால், பூமி­யின் வெப்­ப­நி­லை­யும் அதி­க­ரித்­துள்­ளது.

பூமி­யின் வெப்­ப­நிலை அதி­க­ரிப்­பது, பனிப்­பா­றை­கள் உரு­கு­வது போன்­ற­ வற்­றால் ஏற்­ப­டக்­கூ­டிய பரு­வ­கால மாற்­றம் பேர­ழி­வு­களை ஏற்­ப­டுத்­து­ கி­றது என விஞ்­ஞா­னி­கள் அவ்­வப்­போது எச்­ச­ரிக்கை விடுத்து வரு­கின்­ற­னர்.

ஆனால், அதனை மனித சமூ­கம் கண்­டும் காணா­மற்போய் கொண்­டி­ருக்­கி­றது.

கடந்த 2018ஆம் ஆண்­டில் ஐ.நா. பரு­வ­நிலை மாற்ற அறி­வி­யல் குழு பட்­டி­ய­ல் ஒன்றை வெளியிட்டது. அதில் உற்­பத்தி நிலை­யங்­கள், தொழிற்­சா­லை­கள், வாக­னங்­கள் மற்­றும் விவ­சா­யம் மூலம் வெளி­யா­கும் பூமியை வெப்­ப­மாக்­கும் வாயுக்­களை 2030 ஆம் ஆண்­டுக்­குள் பாதி­யாக குறைக்க வேண்­டும் எனக் கூறப்­பட்­டுள் ளது.

2030ஆம் ஆண்­டில் தீவிர வெப்ப அலை­க­ளின் எண்­ணிக்­கை­யா­னது, 2001ஆம் ஆண்­டில் இருந்­த­து­போல் 3 மடங்கு இருக்­கும். 30 சத­ வீ­தம் அதிக வறட்சி நிலை­யும் காணப் ப­டும். இயற்கைப் பேரி­டர்­கள் மட்­டு­ மன்றி கொரோனாப் பெருந்­தொற்று, பொரு­ளா­தாரச் சரிவு மற்­றும் உணவுப் பற்­றாக்­குறை ஆகிய அனைத்­தும் இந்­தப் பரு­வ­கால மாற்ற எதி­ரொ­லி­யாக நடை­பெ­றும் என்று அறிக்கை தெரி­வித்துள்­ளது.

இந்­தப் பேர­ழி­வு­களைத் தடுத்து நிறுத்­து­ வ­தற்­கான பணி­யில் மக்­க­ளும் முனைப்பு காட்­ட­வேண்­டும். அவ்­வா­றில்லை எனில், பேர­ழி­வு­க­ளின் விளை­வு­களை எதிர்­கொள்ள முடி­யாத அள­வுக்குச் சென்று விடும் என்­று அந்த அறிக்கை மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here