டிரான்ஸ்னிஸ்ட்ரியா பகுதிக்குள்
கிரனேற் லோஞ்சர் தாக்குதல்கள்!
உக்ரைன் எல்லையோரம் மோல்டோவா
வுக்குள் அமைந்துள்ள டிரான்ஸ்னிஸ்ட்
ரியா பிராந்தியத்தில் திங்கள், செவ்வாய்
இரு தினங்களும் அடுத்தடுத்துத் தாக்கு
தல்கள் நடந்திருக்கின்றன.மர்மமான
விதத்தில் கிறனேட் லோஞ்சர்கள் மூலம்
நடத்தப்பட்ட அத் தாக்குதல்களில் ரஷ்யா
வின் ஒளி,ஒலிபரப்பு சேவையை வழங்கு
கின்ற அன்ரனா கோபுரங்கள் சேதமடைந்
துள்ளன.
ரஷ்ய ஆதரவுக் கிளர்ச்சி அரசினால் நிர்
வகிக்கப்படுகின்ற டிரான்ஸ்னிஸ்ட்ரியா
வின் பாதுகாப்புப் பணிமனை ஒன்றும்
தாக்குதலுக்கு இலக்காகி உள்ளது. இத்
தாக்குதல்களை அடுத்து மோல்டோவா
அரசு அதன் பாதுகாப்புச் சபையைக்
கூட்டி நிலைவரத்தை ஆராய்ந்துள்ளது.
உக்ரைன் யுத்தம் தனது எல்லைக்குள்
நீள்வதாக அது அச்சம் வெளியிட்டுள்
ளது.
பிரான்ஸின் வெளிவிவகார அமைச்சர்
ஜீன்-ஈவ்ஸ் லு டிரியன்(Jean-Yves Le Drian)
கடந்த இரண்டு நாட்களாக டிரான்ஸ்
னிஸ்ட்ரியாவில் நடந்த சம்பவங்கள் தொடர்பாகத் தனது கவலையையும் அவதானிப்பையும் வெளியிட்டுள்ளார். இந்தச் சூழலில் மோல்டோவாவின் ஸ்திரத்தன்மை, இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடுஆகியவற்றிற்கு பிரான்ஸ் தனது முழு ஆதரவை வெளிப்
படுத்துகிறது என்று செய்திக் குறிப்பு
ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.
🔵பின்னணி என்ன?
மோல்டோவாவின் டிரான்ஸ்னிஸ்ட்ரியா
(Transnistria) பிராந்தியத்துக்குச் சென்
றால் அன்றைய சோவியத் ஒன்றியத்
துக்குச் சென்று வந்த அனுபவமே ஏற்
படும் என்று கூறுவார்கள். அங்கு அர
சாங்கப் பணிமனைகளுக்கு முன்னால்
இப்போதும் லெனின் சிலைகளைக்
காணலாம். முன்னாள் சோவியத் ஒன்றி
யத்தில் இருந்து பிரிந்த மோல்டோவா
வின் ஒரு பகுதிதான் டிரான்ஸ்னிஸ்ட்
ரியா.
உக்ரைனுக்கும் ருமேனியாவுக்கும்
இடையே இருக்கின்ற ஐரோப்பாவின்
மிக வறிய நாடு மோல்டோவா.அதற்குள்
அமைந்த இன்னுமொரு நாடுதான்
டிரான்ஸ்னிஸ்ட்ரியா.1992 இல் நடந்த போரின் பின் மோல்டோவாவை விட்டுப்
பிரிந்து தன்னைத் தானே சுயாட்சிப்
பிராந்தியமாக அறிவித்துக் கொண்
டுள்ள டிரான்ஸ்னிஸ்ட்ரியாவை உலகம்
தனி நாடாக அங்கீகரிக்கவில்லை. அது
இன்னமும் மோல்டோவா எல்லைக்குள்
அமைந்த ஒரு பகுதியாகவே உலகப் படத்தில் வரையப்படுகிறது. ரஷ்ய மொழி பேசும் சுமார் நான்கு லட்சம்
மக்கள் அங்கு வசிக்கிறார்கள். உக்ரை
னின் டொன்பாஸ் பிராந்தியம் போன்றே
டிரான்ஸ்னிஸ்ட்ரியாவும் ரஷ்யச் செல்
வாக்குக்குட்பட்டது.
மோல்டோவா மேற்கே நேட்டோவின் பக்கமும் டிரான்ஸ்னிஸ்ட்ரியா கிழக்கே ரஷ்யாவின் பக்கமுமாக அணி பிரிந்து நிற்பதே அங்குள்ள அரசியல் நெருக்கடி
யின் மைய விவகாரம் ஆகும்.டிரான்ஸ்
னிஸ்ட்ரியா ஆட்சியாளர்கள் நிதி, பாது
காப்பு, பொருளாதார உதவிகள் என
ரஷ்யாவின் ஆதரவுடனேயே இயங்குகின்
றனர்.மோல்டோவாவுடனான உள்நாட்டுப் போரை அடுத்து ரஷ்யா தனது ஆயிரத்து 500 வீரர்களை அமைதிப்படையாக அங்கு
நிறுத்தியிருக்கிறது. உக்ரைனின் தென்
மேற்குப் பகுதியைக் கைப்பற்றுவதன்
மூலம் அங்கிருந்து டிரான்ஸ்னிஸ்ட்ரியா
வுக்கான தரைப் பாதை ஒன்றை நிறுவி
மோல்டோவா வரை போரை விஸ்தரிப்
பது புடினின் திட்டம் என்று உக்ரைன் குற்றம் சுமத்துகிறது.(பார்க்க வரைபடம் )
-பாரிஸிலிருந்து குமாரதாஸன்.
26-04-2022