நல்லூர் கந்தசுவாமி ஆலய குபேர வாசல் கோபுரத்திற்கான கும்பாபிஷேகம்!

0
226

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் 108 அடி உயரத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட குபேர வாசல் கோபுரத்திற்கான கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது.

இன்று காலை முதல் இடம்பெற்ற விசேட பூஜைகளைத் தொடர்ந்து கோபுரத்திலுள்ள நவ கலசத்திற்கு அபிஷேகங்கள் இடம்பெற்றன.

பிராமண உத்தமர்களின் வேத பிரயாயணங்களுக்கு மத்தியில் மங்கள வாத்தியங்கள் ஒலிக்க நவ கும்பங்கள் வெளி வீதி உலாவந்து, நவதள கோபுரத்திலுள்ள நவ கலசத்திற்கு கும்பாபிஷேகம் இடம்பெற்றது.

கும்பாபிஷேகம் நிறைவு பெற்றதை அடுத்து குபேர வாசல் திறக்கப்பட்டு ஆறுமுகப்பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராய் வெளி வீதி உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

IMG_2979 IMG_3043 IMG_3070 IMG_3132 IMG_3184

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here