இல்-து-பிரான்ஸில் மக்ரோன் கடல் கடந்த தீவுகளில் மரின்: வாக்களிப்பு சொல்லும் செய்தி!

0
99

நடைபெற்று முடிந்த தேர்தலில் அளிக்
கப்பட்ட வாக்குகள் மதிப்பாய்வு செய்யப்
பட்டுவருகின்றன. அமெரிக்காவைப்
போலவே பிரான்ஸும் இரு வேறு துருவ
அரசியல் பாதைகளில் பிளவுண்டு நிற்ப
தனை முடிவுகள் வெளிப்படுத்தி உள்ளன

வாக்களிப்பு வரைபடங்களை ஊடகங்கள்
வெளியிட்டுள்ளன. மக்ரோன் தலைநகர்
பாரிஸிலும் நாட்டின் மேற்கு, தென்மேற்கு
மத்திய பகுதிகளிலும் ஆதரவைப் பெற்றி
ருக்கிறார்.மரின் லூ பென் நாட்டின் வடக்கே கைத்தொழில் மையப் பிராந்தி
யங்களிலும் தெற்கு மத்தியதரைக்கடல்
பகுதிகளிலும் கடல் கடந்த நிர்வாகப் பிராந்தியங்களிலும் அமோக ஆதரவைப்
பெற்றிருக்கிறார்.

பெரு நகரங்களின் மையப் பகுதி வாக்கா
ளர்கள் மற்றும் உயர்-நடுத்தர வர்க்கத்தி
னர், வயோதிபர்கள் மத்தியில் மக்ரோன்
மிகுந்த செல்வாக்கைப் பெற, கிராமப்
புற வாக்காளர்களும் குறைந்த வருமா
னம் பெறுகின்ற வர்க்கத்தினரும் மரின்
அம்மையாருக்கு வாக்குகளை வழங்கி
யுள்ளனர்.

நாட்டின் மிகப் பெரிய பிளவை கிராமங்
கள், நகரங்கள் என இரண்டு வகைக்குள்
கற்பனை செய்வது தவறாகும். உண்மை
யில் பிளவு சமூகங்களுக்குள்ளும் தலை
முறைகளுக்கு இடையிலேயுமே ஏற்பட்டு
ள்ளது – என்று பிரான்ஸின் Ipsos தேர்தல் மதிப்பாய்வு மையத்தின் பணிப்பாளர்
“பிரான்ஸ்-24” செய்திச் சேவைக்குத் தெரி
வித்திருக்கிறார்.

வாக்களித்த 72 சதவீதம் பேரில் சுமார்
8.6 வீதமானோர் ஆத்திரத்துடன் வாக்கு
களை எதிர்த் தரப்புக்குச் செலுத்தி இருப்
பது மக்ரோனுக்கு அபாய மணி ஆகும்.
அதேசமயம் 2.25 சத வீதமானோர் செல்லு
படியற்ற “வெற்று” வாக்குகளைச் செலுத்
தியிருக்கின்றனர்.”மக்ரோன் இந்த முறை
மறுக்கப்பட்ட வாக்குகளுக்குள்ளும் செல்
லுபடியற்ற வாக்குகளுக்குள்ளும் மூழ்
கிப் பிழைத்து வந்துள்ளார்” – என்று
தீவிர இடதுசாரி வேட்பாளர் ஜோன் லூக்
மெலன்சோன் கூறியிருக்கிறார்.

மக்ரோன் இளம் வாக்காளர்களது ஆதர
வைப் பெற்றுக் கொள்ளவும் தவறியுள்
ளார். ஐபிஎஸ்ஓஎஸ் (Ipsos) பகுப்பாய்வுத் தரவு களின் படி, 18-24 வயதுக்கு இடைப்
பட்ட வாக்காளர்களில் 61 வீதமானோர்
லூ பென்னுக்கே வாக்களித்துள்ளனர்.
அதே வயதுப் பிரிவினரில் 41 வீதம் பேர்
எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்கவில்
லை.

மொத்தமாக சுமார் மூன்று மில்லியன் மக்கள் தொகை கொண்ட கடல் கடந்த நிர்வாகப் பிராந்தியங்களாகிய
கரீபியன் தீவுகளான குவாத்லூப் (Guadeloupe)மார்ட்டினிக் (Martinique) மற்றும் பிரெஞ்சு கயானா(French Guiana) இந்து சமுத்திரத் தீவுகளாகிய ரியூனியன் (Réunion) மயொட் (Mayotte) ஆகியவற்றில்
மரின் லூ பென் முதன்னிலை பெற்றுள்
ளார்.பசுபிக் தீவுகளான நியூ கலிடோ
னியா(New Caledonia)பிரெஞ்சு பொலினே
சியா(French Polynesia) ஆகியவற்றில் மாத்
திரமே மக்ரோன் வெற்றி பெற முடிந்துள்
ளது.

மரின் லூ பென்னின் அள்ளுகொள்ளை
யான வாக்கு அதிகரிப்பைப் பார்க்கும்
போது மக்ரோனின் வெற்றியை விடவும்
லூபென்னின் தோல்வியே கவனத்தைப்
பெறுகிறது.பிரபல”லூ மொன்ட்”(Le
Monde) பத்திரிகை மக்ரோனின் வெற்
றியை “வெற்றி உகவை இல்லாத வெற்றி” என்றே குறிப்பிட்டுள்ளது.

2017 – 2022 தேர்தல்களுக்கு இடைப்பட்ட
காலப்பகுதியில் மக்ரோனின் நடவடிக்
கைகளே தீவிர வலது சாரிகளை இந்தள
வுக்கு எழுச்சி கொள்ள வைத்துள்ளது
என்று அவரை விமர்சிப்பவர்கள் கூறுகி
ன்றனர். மக்ரோனுக்கு எதிரான உணர்வு
என்பது கணிசமான ஒரு சக்தியாக இருந்
துள்ளது.அது மரின் லூ பென்னுக்கான
வாக்குகளாக மாறியுள்ளது. அவருக்கு
ஆதரவான வாக்குகள் என்று அவற்றைச்
சொல்லிவிட முடியாது.

ஜூனில் நடைபெறவிருக்கின்ற நாடாளு
மன்றத் தேர்தல் மக்ரோனுக்கு அதிபர் தேர்தலின் மூன்றாவது சுற்றுப் போன்
றது என்று எதிரணியினர் விமர்சிக்கின்
றனர்.மரின் லூ பென்னைத் தோற்கடிப்
பதற்காக மக்ரோனுக்குச் செலுத்தப்பட்ட
வாக்குகள் தவிர்க்கமுடியாத தெரிவிற்கு
உட்பட்டவை. ஆனால் நாடாளுமன்றத்
தேர்தலில் அவ்வாறான நிலைமை இருக்
கப்போவதில்லை. மக்ரோனின் கட்சி
பெரும்பான்மை இழக்கவும், தீவிர வலது
சாரிகளும் இடது சாரிகளும் சபையின்
பெரும்பான்மையாக நிறைப்பதற்கும்
இம்முறை வாய்ப்பிருக்கிறது. பொறுத்
திருந்து பார்ப்போம்.

(வரைபடம்:நன்றி: Francebleu)

            -பாரிஸிலிருந்து குமாரதாஸன்.
                                                  26-04-2022

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here