ஈபிள் கோபுர வெற்றி உரையில்
மக்களுக்கு மக்ரோன் வாக்குறுதி!
நாட்டுக்குப் புதுப்பிக்கப்பட்ட வழிமுறை
களில் அடுத்த ஐந்து ஆண்டுகள் நல்லாட்
சியை வழங்கப்போவதாக மக்ரோன் தனது வெற்றி உரையில் உறுதிமொழி
வழங்கியிருக்கிறார். ஒரு கட்சித்தரப்பின்
வேட்பாளராக அன்றிச் சகலருக்குமான
அரசுத் தலைவராக விளங்குவார் என்றும்
அவர் உறுதி கூறியிருக்கிறார்.
தேர்தலி்ல் வென்று மேலும் ஐந்து ஆண்டு
களுக்கு அதிபராகத் தெரிவு செய்யப்பட்
டிருக்கின்ற அவர்,பல்லாயிரக்கணக்கான
தனது ஆதரவாளர்கள் மத்தியில் நேற்றி
ரவு வெற்றி உரையாற்றினார். தனது
துணைவி மற்றும் பல சிறுவர்கள், பரப்
புரை அணியினர் சகிதம் அவர் ஈபிள்
கோபுரம் அமைந்துள்ள சோம்ஸ் து மாஸ்
பகுதிக்கு வந்து சேர்ந்த போது அங்கு திரண்டிருந்தோர் விண்ணதிரும் வித
மாக வெற்றிக் கோசங்களை எழுப்பி அவரை வரவேற்றனர்.எகிப்து நாட்டைச்
சேர்ந்த இளம் ஒபேரா பாடகி ஃபர்ரா எல் டிபானி(Farrah El Dibany) நாட்டின் தேசிய கீதத்தை உணர்வு மேலிடப் பாடினார். பிரதமர் ஜீன் காஸ்ரோ மற்றும் அமைச்
சர்கள், அரசியல் பிரமுகர்கள் எனப் பலரும் அந்த வெற்றி விழாவில் கூடியி
ருந்தனர்.
“அன்பான நண்பர்களே, குடிமக்களே
உங்கள் அனைவருக்கும் நன்றி.நான்
உங்களுக்கு எவ்வளவு கடமைப்பாடுடை
யவன் என்பதை அறிவேன்.
” மிகக்கடினமான ஆனால் மகிழ்ச்சியு
மான அதேசமயம் எதிர்பாராத சவால்
களும் நிறைந்த கடந்த ஐந்து ஆண்டுக
ளின் பின்னர் உங்களில் பலர் மேலும் ஐந்து ஆண்டுகளுக்குக் குடியரசைக் கொண்டு நடத்துவதற்காக என்னைத்
தெரிவுசெய்துள்ளீர்கள்.நாம் ஒன்றாக இணைந்து பிரான்ஸை மேலும் சுதந்திர
மானதாகவும் ஐரோப்பாவை மிகவும் வலிமையானதாகவும் மாற்ற முடியும். நாம் ஒவ்வொருவரும் நமது படைப்பாற்
றலை வெளிப்படுத்துவதன் மூலம் நாட்
டை சிறந்ததாகவும் பசுமையானதாகவும்
மாற்ற முடியும்.
-இவ்வாறு மக்ரோன் தனது உரையின் ஆரம்பத்தில் தெரிவித்தார்.
தனக்கு வாக்களித்தவர்களுக்கும் தனது
திட்டங்களை எதிர்த்த போதிலும் தீவிர வலது சாரியைத் தடுப்பதற்காக தனக்கு
வாக்குச் செலுத்தியோரையும் வாக்களிப்
பில் கலந்துகொள்ளாமல் விலகி இருந்த
வர்களையும் எதிர்த் தரப்புக்கு வாக்களித்
தவர்களையும் ஒருங்கே கவனத்தில் கொள்வதுடன் அவர்கள் அனைவருக்
குமான குடியரசின் அதிபராக விளங்கு
வார்-என்றும் மக்ரோன் தனது உரையில் குறிப்பிட்டார். லூ பென் அம்மையாருக்கு
வாக்களித்தவர்களது சீற்றத்தைப் புரிந்து
கொள்வதாகவும் அவர் அங்கு கூறினார்.
இந்தத் தேர்தலில் மக்ரோன் வென்றுள்ள போதிலும் நாடு தீவிர வலதுசாரி அரசி
யல் எழுச்சி அலை ஒன்றைச்சந்தித்திருப்
பதை முடிவுகள் காட்டுவதாக அவதானி
கள் குறிப்பிடுகின்றனர். அத்தகைய ஒர்
ஆபத்தின் பின்னணியில் வெற்றியீட்டி
யிருக்கின்ற மக்ரோனுக்கு ஐரோப்பியத்
தலைவர்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்
களைத் தெரிவித்து வருகின்றனர்.
2017 தேர்தலில் தேசிய அளவில் ஆக 33.9% வீத வாக்குகளை மட்டுமே பெற்றி
ருந்தார் மரின் லூ பென். இம்முறை
அவரது வாக்குவீதம் 41.46 ஆக உயர்ந்
துள்ளது. பிரான்ஸின் வரலாற்றில் தீவிர
வலதுசாரிகள் சந்தித்துள்ள உச்ச பட்ச
எழுச்சி இதுவாகும். இவ்வாறு நாடு வலதுசாரி அரசியலின் பக்கம் ஒரு துருவமாகி நிற்கின்ற நிலையில் மக்ரோனின் அடுத்த ஐந்து ஆண்டுகால நிர்வாகம் பெரும் நெருக்கடிகளுக்குள்
பயணிக்க வேண்டி இருக்கும் என்று
அரசறிவியல் நிபுணர்கள் குறிப்பிடுகின்
றனர்.
ஜூன் மாதம் நடைபெறவுள்ள நாடாளு
மன்றத் தேர்தல், தீவிர வலது சாரிகளுக்
கும் தீவிர இடதுசாரியாகிய மெலன்சோ
னுக்கும் மத்தியில் மக்ரோன் சந்திக்கப்
போகின்ற மூன்றாவது அரசியல் சோத
னைக்களமாக இருக்கும் என்று எதிர்
பார்க்கப்படுகிறது.
இதேவேளை,
இருபது ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே அதிபர் இரண்டாவது முறை அதிகாரத்
தைக் கைப்பற்றியிருப்பது போன்று
மக்ரோனின் துணைவியார் பிரிஜித் மக்ரோனும் இரண்டாவது தடவையாக
வும் நாட்டின் முதல் பெண்மணி என்ற
பெருமையைப் பெற்றுக் கொண்டுள்
ளார்.மக்ரோனின் வெற்றிக்காக வாக்கா
ளர்களுக்கு அவர் நன்றி தெரிவித்திருக்கிறார்.
-பாரிஸிலிருந்து குமாரதாஸன்
25-04-2022