44 வயதான எமானுவல் மக்ரோன்
பிரான்ஸின் அதிபராக இரண்டாவது
முறை வெற்றிவாகை சூடியுள்ளார்.
இரவு எட்டு மணிக்கு வெளியாகிய
உத்தேச மதிப்பீடுகளின் படி இரண்டா
வது சுற்றில் அவர் 57.6%வீத வாக்குக
ளால் வென்றிருக்கிறார்.மரின் லூ பென்
னுக்கு 42.4%வீத வாக்குகள் கிடைத்துள்
ளன. மக்ரோன் 2017 தேர்தலில் பெற்ற
66.10 வீத வாக்குகளை விட 8.5 வீதம்
குறைவான வாக்குகளையே வென்றி
ருக்கிறார். பதவியில் இருக்கின்ற அதி
பர் ஒருவர் இரண்டாவது தடவையாகவும்
வெற்றி பெறுவது கடந்த இருபது ஆண்டு
களின் பின்னர் இது முதல் முறை ஆகும்.
முழுமையான வாக்கு முடிவுகள் எதிர்
பார்க்கப்படுகின்றன.மக்ரோனின் வெற்றி உரைக்காக அவரது ஆதரவாளர்
கள் ஈபிள் கோபுரப் பகுதியில் திரளத்
தொடங்கியுள்ளனர். அங்கு பலத்த பாது
காப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்
றன.
Le Touquet (Pas-de-Calais) இல் விடுமுறை
கால இல்லத்தில் தங்கியிருந்த மக்ரோன்
அங்கிருந்து இன்றிரவு எலிஸே மாளிகை
திரும்பினார். பின்னர் வெற்றி உரையை
நிகழ்த்துவதற்காக அவர் ஈபிள் கோபுரம்
அமைந்துள்ள Champ-de-Mars பகுதிக்குப் புறப்பட்டுள்ளார் என்று அறிவிக்கப்படு
கிறது.
🔵வாக்களிக்காதோர் வீதம்
1969 க்குப் பின் மிக உச்சம்!
இறுதிச் சுற்றில் வாக்களிக்காதோர்
எண்ணிக்கை 26.31%வீதமாக அதிகரித்
துள்ளது. தேர்தல் வரலாற்றில் 1969 ஆம்
ஆண்டுக்குப் பின் இது மிக உச்ச எண்
ணிக்கை என்று செய்திகள் தெரிவிக்
கின்றன.
கடந்த தேர்தல்களில் வாக்களிக்காதோர்
வீதம் ஆண்டு ரீதியாக வருமாறு :
*15.68% – 1965
*31.15% – 1969
*12.7% – 1974
*14.15% – 1981
*15.94% – 1988
*20.34% – 1995
*20.29% – 2002
*16.03% – 2007
*19.65% – 2012 *25.44% – 2017
-பாரிஸிலிருந்து குமாரதாஸன்.
24-04-2022