பிரான்சில் பாரிஸ் நகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இரவு நேரத் தொடருந்துகளில் தமிழர்களை இலக்குவைத்து திருட்டுக்கும்பல்கள் மீண்டும் தமது கைவரிசையைக் காட்ட ஆரம்பித்துள்ளனர்.
வேலை முடிந்து செல்லும் தமிழர்களிடமே வழிப்பறியில் குறித்த கும்பல் ஈடுபட்டுவருகின்றது.
இதுகுறித்து தமிழர்கள் விழிப்புடன் செயற்படுமாறு கேட்கப்பட்டுள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை பரிஸில் இருந்து இரவு 9 மணிக்கு MELUN நோக்கிச் சென்ற RER D தொடருந்தில் YERRE பகுதியில் 4 அராப் இளைஞர் குழு பலரும் பார்த்திருக்க தமிழர் ஒருவரின் தங்கச் சங்கிலியை அறுத்துச் செல்ல முயன்றதுடன் இலத்திரனியல் மின் உந்தையும் பறித்துச்செல்ல முயன்ற நிலையில் அதுகைகூடாமல் தப்பிச்சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமியர்களின் நோன்பு நடைபெறும் இந்தப் புனிதமான வேளையிலும் இவ்வாறான “அராப்” இன குழுக்களின் அநாகரிக செயல் குறித்து தொடருந்தில் இருந்த பலரும் விசனம் தெரிவித்துள்ளனர்.
குறித்த 4 அராப் இன திருட்டுக் கும்பல் இளைஞர்களும் முகக்கவசம் எதுவுமே அணியாமல் தொடருந்தில் முகங்களை அடையாளம் காட்டியவாறே பயணம் செய்தமையும் சுட்டிக்காட்டத் தக்கது.
சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னர் தொடருந்தில் குறித்த கும்பல் பிரெஞ்சுப் பெண் ஒருவருடன் கருத்து முரண்பாட்டில் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து பிரான்சு காவல்துறையினர் கருத்தில் கொள்ளவேண்டும் என்பதே பலரதும் எதிர்பார்ப்பாக உள்ளது.
(எரிமலை செய்திப் பிரிவு)