ரஷ்யப் போர்க் கப்பல் மீதான தாக்குதலுக்கு அமெரிக்காவின் உளவு விமானம் உதவியதா?

0
266

ரஷ்யாவின் கருங்கடல் கடற்படையின்
பெருமைக்குரிய மொஸ்க்வா (Moskva) போர்க் கப்பல் அண்மையில் உக்ரைனின் ஏவுகணைத் தாக்குதலுக்கு இலக்காகித் தீப்பற்றி எரிந்து கடலில் மூழ்கியமை தெரிந்ததே.அந்தக் கப்பலை வெற்றிகர
மாக இலக்கு வைப்பதற்கு உக்ரைன் படையினருக்கு அமெரிக்காவின் நவீன உளவு விமானம் ஒன்று உதவியிருக்க
லாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

போர்க் கப்பலை உக்ரைனின் ஏவுகணை
தாக்குவதற்கு முன்பாகக் கருங்கடல் பகுதி மீது அமெரிக்காவின்’Boeing P8 Poseidon’ என்ற கடற்படை ரோந்து விமா
னம் பறந்துள்ளது என்ற தகவலை
“ரைம்ஸ்”சஞ்சிகை வெளியிட்டுள்ளது. நீர்மூழ்கிகள் மற்றும் போர்க் கப்பல்க
ளைக் கண்காணிப்பதற்கு அமெரிக்கா பயன்படுத்துகின்ற அதி நவீனநுட்பங்
கள் கொண்டது “Poseidon” விமானம் என்று கூறப்படுகிறது. ‘பிளைட்ரடார்24
‘என்ற(FlightRadar24 website) விமானப் பறப்புகளைப் பதிவு செய்கின்ற இணை
யத்தளத்தின் தரவுகளின் அடிப்படையி
லேயே “ரைம்ஸ்” செய்தி நிறுவனம் கருங்கடலில் அமெரிக்க விமானத்தின் நடமாட்டம் பற்றிய இத்தகவலை வெளி
யிட்டுள்ளது.கருங்கடலில் ருமேனியா எல்லை வரை வந்த அமெரிக்க விமானம் உக்ரைன் எல்லையை அண்மித்ததும் அது பிளைட் ரடார் திரையில் திடீரென மறைந்துவிட்டது என்றும் அதன் பறப்பு உயரம் கடல் மட்டத்தில் 8,839 மீற்றர்களில் இருந்து 3,352 மீற்றர்களாகக் குறைந்துள்
ளது எனவும் ‘ரைம்ஸ்’ தெரிவித்துள்ளது.

கப்பலில் இருந்த வெடிமருந்துகளில்
ஏற்பட்ட விபத்தினாலேயே தீ பரவி கப்பல்
மூழ்கியதாக மொஸ்கோ தெரிவித்திருந்
தது. ஆனால் தனது உள்நாட்டுத் தயாரிப் பான ஏவுகணை கொண்டு கப்பலைத்
தாக்கி அழித்ததாக உக்ரைன் உரிமை
கோரியது.கடலில் கப்பலின் அமைவிடத்
தைச் சரியாக அடையாளம் காண்பதற்கு
அமெரிக்க விமானம் உக்ரைன் படையின
ருக்கு உதவியிருக்கலாம் என்றுதெரிவிக்
கப்படுகிறது.

“உக்ரைனின் இராணுவ நடவடிக்கைக
ளுக்கு நாங்கள் புலனாய்வு உதவிகளை
வழங்கி உதவிவருகிறோம்” என்று அமெ
ரிக்கப் பாதுகாப்பு அமைச்சர் அண்மை
யில் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ரஷ்யாவின் கப்பல் தாக்கப்பட்ட சமயம்
500 க்கும் அதிகமான கடற்படையினர்
அதில் நிலைகொண்டிருந்தனர்.அவர்கள்
அனைவரும் மீட்கப்பட்டனர் என்று மொஸ்கோ கூறியிருந்தது. அதற்கான ஆதாரங்களை அது வெளியிடவில்லை. இதனால் படையினரது நிலை தெரியாது உறவினர்கள் பெரும் குழப்பமுற்றுள்ள
னர்.

இதேவேளை, உக்ரைனின் முக்கிய வர்த்
தகத் துறைமுக நகரமாகிய மரியுபோலை
கைப்பற்றி விட்டதாக அதிபர் புடின் அறிவித்திருக்கிறார். எனினும் அங்கு தொடர் ந்தும் சண்டை நீடிப்பதாக சுயாதீன செய்தி வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

         -பாரிஸிலிருந்து குமாரதாஸன்.
                                                  22-04-2022

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here