யாழ்ப்பாணம் மிருசுவிலில் புகையிரத கடவையைக் கடக்க முற்பட்ட மகேந்திரா ரக (படி) வாகனத்தை யாழ்தேவி தொடருந்து மோதிய விபத்தில் சிறுவன் உயிரிழந்துள்ளார். தந்தையும் சகோதரனும் படுகாயம்
இச்சம்பவம் இன்று (22) காலை 10.15. மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் கொடிகாமம் தவசிகுளம் பகுதியைச் சேர்ந்த நாகமணி தயாபரன் (வயது 45), இவரது பிள்ளைகளான தயாபரன் தனுசன் (வயது 15), தயாபரன் ஜனுசன் (வயது 12) ஆகியோருக்கே இந்நிலை ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர் என யாழ்.ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தமையும் பின்னர் அது தவறு என்று சுட்டிக்காட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது;
காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த யாழ்தேவி தொடருந்து கொடிகாமம் – மிருசுவில் வைத்தியசாலைக்கு அண்மையிலுள்ள புகையிரதக் கடவையைக் கடக்க முற்பட்ட மகேந்திரா ரக வாகனத்தை மோதியே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இப்பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் இடம்பெறும் நிலையில், இங்கு புகையிரத பாதுகாப்பு அமைக்கக் கோரி மக்கள் போராட்டம் நடத்தியதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.