தேர்தல் முடிந்ததும் மக்ரோன் ஈபிள் கோபுரத்தின் கீழ் உரை!

0
296

ஞாயிற்றுக்கிழமை மாலை வாக்களிப்பு
முடிவடைந்து தேர்தல் முடிவு அறிவிக்கப்
பட்டதும் மக்ரோன் பாரிஸ் நகரில் ஈபிள்
கோபுரம் அமைந்துள்ள சோம்ஸ் து மாஸ்
(Champ de Mars) பகுதியில் தனது ஆதர
வாளர்கள் மத்தியில் உரையாற்றவுள்
ளார்.

இத்தகவலை பாரிஸ் செய்தி ஊடகங்கள்
வெளியிட்டிருக்கின்றன.

2017 தேர்தலில் அவர் வெற்றிபெற்றதும்
இதே இடத்தில் தனது வெற்றி உரையை
நிகழ்த்த விரும்பியிருந்தார்.ஆனால் பா
ரிஸ் நகரசபை அதிகாரிகள் அதற்கான
அனுமதியை வழங்கவில்லை. ஆனால்
இந்தத் தடவை அவரது கோரிக்கைக்கு
நகரசபை நிர்வாகம் உடனேயே அனுமதி
வழங்கிவிட்டது என்று தகவல் வெளியி
டப்பட்டுள்ளது.மக்ரோன் பாரிஸ் லூவர் (Louvre) அருங்காட்சியகம் முன்பாக 2017 தேர்தல் வெற்றி உரையை நிகழ்த்தியி
ருந்தார்.

அதிபர் தேர்தலில் வெல்லப்போவது
யார் என்ற பலப்பரீட்சை தொடர்கிறது.
நேற்றைய தொலைக்காட்சி விவாதம்
தேர்தல் சூட்டைக் கிளப்பிவிட்டுள்ள
நிலையில் வேட்பாளர்கள் இருவரும்
இறுதிப் பரப்புரைக் கூட்டங்களை நடத்
தியிருக்கின்றனர்.”மக்ரோனா பிரான்ஸா
என்பதைத் தீர்மானியுங்கள்”-என்று தீவிர
வலது சாரி மரின் லூ பென் இன்றைய
கூட்டத்தில் அழைப்பு விடுத்தார்.மக்ரோ
னுக்கு எதிரான முன்னணியில் அணி
திரளுமாறும் அவர் நாட்டு மக்களுக்கு
வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

அதேசமயம் மக்ரோனின் ஆதரவாளர்கள் பாரிஸ் நகரில் வீடுவீடாகச் சென்று மக்
களை வாக்களிக்குமாறு கேட்டுவருகின்
றனர். ஜோன் லூக் மெலன்சோனின் இடதுசாரி ஆதரவாளர்களது வாக்கு
களைக் கவருவதற்கான முயற்சிகளில்
இரண்டு பிரதான வேட்பாளர்களது ஆதர
வாளர்களும் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.

 -பாரிஸிலிருந்து குமாரதாஸன்.
                                                 21-04-02022

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here