குழந்தையின் மறுக்கப்பட்ட சுதந்திரம்!

0
198

syria-child-deathbodyசமூக வலைத்தளங்களில் மிக பிரபல்யமாக பேசப்படும் இந்தப் படம், ஒரு கலைஞரால் சித்திரிக்கப்பட்டு வரையப்பட்ட ஒன்றல்ல. தன் குடும்பத்துடன் அகதியாக கிரீக் தீவு நோக்கிச் சென்ற 3 வயது குழந்தையின் உடலே.
சிரியாவிலிருந்து அகதியாக கொள்ளளவுக்கும் அதிகமாக மக்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் அதில் பயணித்த, 5 வயதான கலீப் குர்தி மற்றும் அவரது சகோதரனான மூன்றே வயதான அய்லன் ஆகிய இரு பச்சிளம் குழந்தைகள் துருக்கிக் கரையை அண்டிய கடலில் மூழ்கி இறந்துள்ளனர்.syria-child-aylanbrother
ஐசிஸின் கட்டுப்பாட்டிலிருந்த கொபானேவிலிருந்து தஞ்சம் கோரி செல்ல முற்பட்ட போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இத்துயரச் சம்பவத்தில், குறிப்பிட்ட இரு குழந்தைகளுடன் அவரது தாயும் மரணித்துள்ளார்.
குறித்த 3 வயது குழந்தை இறந்து பாதிக் கரையில் காணப்படுகின்ற குறித்த படம் சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக பகிரப்பட்டு வருவதோடு, இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அப்படத்தை சித்திரிக்கும் வகையிலான ஓவியங்கள் வரையப்பட்டு பகிரப்பட்டு வருகின்றது.
அலி ஹொகா கடற்கரையில், உயிரற்று காணப்படும் அந்தச் சின்னஞ்சிறு குழந்தை முழு உலகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
எனவே, வாய் மூடி நிற்கும் சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு கொண்டு வரும் நோக்கில், சமூக வலைத்தளங்களில் குறிப்பாக டுவிற்றரில் இது குறித்து தங்களது அநுதாபங்களைத் தெரிவிக்கும் சமூக ஆர்வலர்கள், பல்வேறு ஓவியங்கள் மூலம், இது குறித்து தங்கள் கண்டனத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here