உயிர்த்த ஞாயிறு தீவிரவாத தாக்குதல்: இன்றுடன் மூன்று ஆண்டுகள் நிறைவு!

0
272

உயிர்த்த ஞாயிறு அன்று தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி இன்றுடன் மூன்று ஆண்டுகள் நிறைவடைகின்றன.

கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி கட்டுவாப்பிட்டியில் உள்ள தேவாலயம், மட்டக்களப்பு சியோன் தேவாலயம் மற்றும் கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் மற்றும் கொழும்பிலுள்ள மூன்று ஹோட்டல்களையும் இலக்கு வைத்து பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது.

மேலும், தெமட்டகொட பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு மற்றும் தெஹிவளையில் உள்ள தங்கும் விடுதியில் சிறு வெடிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்தன.

இத்தாக்குதலில் வெளிநாட்டவர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் உட்பட 270க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதுடன் 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

தாக்குதல் இடம்பெற்று மூன்று வருடங்கள் கடந்துள்ள நிலையில், கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் பல விசேட சமய நிகழ்வுகள் இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை இன்று காலை 8.45 மணியளவில் கத்தோலிக்க தேவாலயங்களில் ஆலய மணி ஒலிக்கப்பட்டு விஷேட வழிபாடுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here