“வேண்டுமானால் எனது கட்சிக்கு அமோக வாக்களித்து என்னைப் பிரதமராகத் தெரிவு செய்யுங்கள்”
-மூத்த அரசியல் தலைவர் ஜோன் லூக்
மெலன்சோன் இவ்வாறு தொலைக்
காட்சிப் பேட்டி ஒன்றில் வாக்காளர்களி
டம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
அதிபர் தேர்தலின் முதற் சுற்றில்
மரின் லூ பென்னுக்கு மிக நெருக்கமாக வாக்குகளைப் பெற்று பிரான்ஸின் மூன்றாவது அரசியல் சக்தியாகத் தன்னை அடையாளம் காட்டியவர் மெலன்சோன். (Jean-Luc Mélenchon)
“la France insoumise” என்ற கட்சியை வழி
நடத்துகின்ற தீவிர இடதுசாரியாகிய அவர், இந்த முறை தேர்தலில் கடைசித் தடவையாகப் போட்டியிட்டிருந்தார்.
இரண்டாவது சுற்றுக்கு முன்னேறுகின்ற
வாய்ப்பு அவரை நெருங்கி வந்த போதி
லும் நாட்டின் சோசலிஸட்டுகள் மற்றும் கம்யூனிஸ்ட்டுகள் உட்பட இடதுசாரிகள் மத்தியில் காணப்படுகின்ற ஐக்கியமின்
மையால் வெற்றிவாய்ப்பை இழந்தார்.
முதற்சுற்று முடிவுகளுக்குப் பிறகு முதல்
முறையாக தொலைக்காட்சி ஒன்றுக்கு நேர்காணல் வழங்கியுள்ளார். அதில்
அவர், அதிபர் தேர்தலைத் தொடர்ந்து
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்
தலில் எந்தத் தரப்புடனும் கூட்டணி
அமைக்கப்போவதில்லை என்று கூறியி
ருக்கிறார். தனது கட்சிக்கு ஆதரவளிப்
பதன் மூலம் அதிக உறுப்பினர்களை
நாடாளுமன்றம் அனுப்பிப் புதிய பிரதம
ராகத் தன்னைத் தெரிவு செய்யுமாறு
ஆதரவாளர்களிடம் கேட்டிருக்கிறார்.
நாட்டின் அதிபரால் நியமிக்கப்படுகின்ற
பிரதமரை விட மக்களால் தெரிவு செய்
யப்படுகின்ற பிரதமரை விரும்புகிறேன்
என்றும் அவர் கூறியிருக்கிறார்.
பிரான்ஸின் நாடாளுமன்றத் தேர்தல்
வாக்களிப்பு எதிர்வரும் ஜூன் மாதம்
12ஆம் 19 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
குமாரதாஸன். 20-04-2022
பாரிஸ்.