10 வயதுக்குட்பட்ட சிறாரிடையே புது வகையான கல்லீரல் வீக்கம்!

0
283


காரணம் கண்டறிய தீவிர முயற்சி

பிரான்ஸ் உட்பட சில நாடுகளில் பத்து வயதுக்கு உட்பட்ட டசின் கணக்கான சிறுவர்கள் மத்தியில் புதுவகையான கல்லீரல் வீக்க நோய் அவதானிக்கப்பட்
டிருக்கிறது. அது வேறும் பல நாடுகளில் காணப்படலாம் என்று உலக சுகாதார நிறுவனம் ஓர் அறிக்கையில் எச்சரித்
துள்ளது.

முதலில் பிரிட்டனிலும் பின்னர் ஸ்பெ
யின், நெதர்லாந்து, டென்மார்க், அமெ
ரிக்கா போன்ற நாடுகளிலும் பல டசின் சிறுவர்களில் தோன்றியுள்ள எதிர்பாராத இந்தப் புதிய வைரஸ் நோயின் நோயி
யல் தன்மையை அறிந்து கொள்ள ஆய்வு
கள் நடத்தப்பட்டுவருவதாகவும் உலக
சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹெபடைடிஸ்(hepatitis) எனப்படுகின்ற
கல்லீரல் நோய் பொதுவாக வளர்ந்தவர்
களில் தோன்றுவது வழக்கம். ஏ முதல் ஈ
வரை (A to E)பெயரிடப்படுகின்ற ஹெப
டைடிஸ் வைரஸ் பல்வேறு காரணங்க
ளால் ஒருவருக்குத் தொற்றுகிறது.அதன் பாதிப்புகள் வேறுபடுகின்றன. ஆனால்
குழந்தைகளில் கண்டறியப்பட்டுள்ள
புதிய ஹெபடைடிஸ் வைரஸ் இந்த ஏ
முதல் ஈ வரையான வைரஸ் கிரிமிகளுக்
குள் அடங்காத புதிய வகை என்ற தகவல்
மருத்துவ வட்டாரங்களில் அதிர்ச்சியை
ஏற்படுத்தி உள்ளது.

பிரான்ஸின் லியோன் போதனா மருத்
துவ மனையில்(Lyon University Hospital)
நோய்த் தன்மை அறியாத கல்லீரல் வீக்
கத்தினால் பாதிக்கப்பட்ட இரண்டு சிறு
வர்கள் மீது பரிசோதனைகள் நடத்தப்
பட்டு வருவதாகப் பொதுச் சுகாதாரப் பிரி
வினர் தெரிவித்துள்ளனர்.

வழக்கமாக வளர்ந்தோரில் ஏற்படுகின்ற
ஹெபடைடிஸ் நோயின் பொதுவான
அறிகுறிகளாகிய உடல் மஞ்சள் நிறமாக மாறுதல், வயிற்றில் அரிப்பு, கடும் நிறத்
தில் சிறுநீர் வெளியேறுதல், உடல் வெப்
பம் அதிகரித்தல், வழமைக்கு மாறான
களைப்பு, பசியின்மை, வயிற்றுவலி
போன்ற அதே அறிகுறிகளே சிறுவர்க
ளிடையேயும் அவதானிக்கப்பட்டுள்ளன.

ஹெபடைடிஸ் ஏற்பட்ட சிறுவர்களில் எவ
ரும் உயிரிழக்கவில்லை. ஆரோக்கியமாக
இருந்த சிலர் ஆபத்தான கட்டத்தை எட்டி யுள்ளனர். அவர்களில் ஆறு சிறுவர்களு
க்கு ஈரல் மாற்று அறுவைச் சிகிச்சை செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது
என்று மருத்துவ அறிக்கைகள் வெளி
யாகி உள்ளன.

ஐக்கிய ராஜ்ஜியத்தின் சுகாதாரப் பாது
காப்பு முகவரகத்தைச் சேர்ந்த (UKHSA)
நிபுணர் ஒருவர் கருத்து வெளியிடுகை
யில், கைகளை நன்கு கழுவுதல் போன்ற
சாதாரண சுகாதாரப் பழக்க வழக்கங்க
ளைப் பேணுவதே நோயின் மூலம் என்ன என்பது தெரியாத இந்த வைரஸ் நோய்த் தொற்றுக்கான பாதுகாப்பு வழி முறை ஆகும் என்று தெரிவித்துள்ளார். குழந்
தைகளில் நோயின் அறிகுறி கண்டால்
உடனேயே சிகிச்சை நிலையங்களுடன்
தொடர்பு கொள்ளுமாறு பெற்றோர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

       -பாரிஸிலிருந்து குமாரதாஸன்.
                                          19-04-2022

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here