இந்தியா போர் தொடுத்தால் அதை எதிர்கொள்ள தயார் : பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் !

0
145

pakistan_india_by_sultanmahmood இந்தியா போர் தொடுத்தால் அதை எதிர்கொள்ள தயார் என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளார். அண்மை காலமாக எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றம் குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய ராணுவ தலைமை தளபதி தல்பீர் சிங் சுஹாக் போருக்கு இந்தியாவும் தயாராகி இருப்பதாக கூறியிருந்தார். பாகிஸ்தன் வானொலி நிகழ்ச்சியில் இதற்கு பதில் அளித்துள்ள அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் எந்த வகையான போருக்கும் பாகிஸ்தான் தயார் என்று தெரிவித்தார். 

போர் உணர்வால் துண்டப்பட்டு இந்தியா நடவடிக்கை எடுத்தால் பெருத்த சேதத்தை சந்திக்க நேரிடும் என்றும் அவர் மிரட்டல் விடுத்துள்ளார். பாகிஸ்தான் அமைதியை விரும்பும் நாடு என்று குறிப்பிட்டுள்ள ஆசிப் சண்டை என்று வந்தால் அதை எதிர்கொள்வது எப்படி என்பதும் தங்களுக்கு தெரியும் என்றும் கூறினார். 

50 ஆண்டுகளுக்கு முன் இருந்ததை விட தற்போது பாகிஸ்தான் ராணுவம் தகுதியும், அனுபவமும் நிரம்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தீவிரவாதத்திற்கு எதிராக பர ஆண்டுகளாக போராடி வரும் பாகிஸ்தான் ராணுவத்திற்கு எந்த சவாலையும் முறியடிக்கும் திறன் என்றும் ஆசிப் கூறினார்.  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here