காலிமுகத்திடலில் தமிழரின் அகிம்சைப் போராட்டத்திற்கு சிங்களம் கொடுத்த வன்கொடுமையை தமிழன் மறக்கவும் மாட்டான் மன்னிக்கவும் மாட்டான்.
1956 ஆம் ஆண்டு தனிச் சிங்களச் சட்டத்தை எதிர்த்து காலிமுகத்திடலில் சாத்வீக வழியில் போராடிய தமிழ் தலைவர்களையும் பொது மக்களையும் கற்களாலும் கொட்டன்களாலும் அடித்து காயப்படுத்தி சிங்கள பொலிசாரும் காடையர்களும் விரட்டியடித்தனர்.
இந்தப் போராட்டம் சோற்றுக்காக நடந்தது அல்ல மறுக்கப்பட்ட தமிழ்மொழி உரிமைக்காக நீதி கேட்டு நடந்தது.
சாத்வீக வழியில் நீதி கேட்ட தமிழர்களிடம் வன்முறையைத் திணித்தது பௌத்த சிங்கள பேரினவாத ஆட்சியாளர்.
– வரலாறு.