இலங்கையில் தற்போது உச்சம்பெற்றுள்ள மக்கள் புரட்சி!

0
267

இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் பொருளாதார பிரச்சினையை எதிர்த்து தற்போது நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

காலிமுகத்திடலில் 10 ஆவது நாளைக் கடந்து போராட்டம் இடம்பெறும் அதேவேளை, கொழும்பு உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களிலும் மக்கள் வீதிக்கு இறங்கி தடைகளை போட்டு, ரயர்களை கொளுத்திப் போராட்டங்களை நடத்திவருவதனால் போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்துள்ளது.
இதேவேளை நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி மக்கள் போராட்டம் ஆங்காங்கே வெடித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

நாட்டின் பல பகுதிகளில் எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்து தற்போது போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன்போது எரிபொருளை தடையின்றி வழங்குமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதன் காரணமாக சிலாபம் – கொழும்பு வீதி காக்காப்பள்ளியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன், ஆர்ப்பாட்டம் காரணமாக மலையக ரயில் சேவை, ரம்புக்கனை பிரதேசத்தில் தடைப்பட்டுள்ளது.

கண்டியில் இருந்து கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் தனியார் பேருந்துகள் இயங்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், எரிபொருள் விலையேற்றத்துக்கு எதிராக ஹிங்குராங்கொட, பத்தேகம, திகன, காலி, மாதம்பே, கம்பளை, கண்டி, கேகாலை, மத்துகம மற்றும் அவிசாவளை ஆகிய பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here