கண்டாவளைபிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி கிராம அலுவலர் பிரிவில் உள்ள மயில்வாகனபுரம் பகுதியில் மக்கள் குடியிருப்பினுள் யானைகள் புகுந்து பயன் தரக்கூடிய நிலையில் இருந்த 15 இற்கும் மேற்ப்பட்ட தென்னை மரங்களை அழித்துள்ளதுடன் வாழ்வாதாரத்திற்காக பயிரிடப்பட்டிருந்த 50க்கும் மேற்பட்ட வாழை மரங்களையும் அழித்துள்ளது. மற்றும் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த மரவள்ளித் தோட்டத்தினையும் அழித்து துவம்சம் செய்துள்ளது.
இப்பகுதியில் அதிகமானவர்கள் கடல்த் தொழிலை நம்பியே வாழ்ந்து வருகின்றனர், இவர்கள் நாளாந்தம் தமது வாழ்வாதாரத்திற்காக மயில்வாகனபுரம் பகுதியிலிருந்து சுண்டிக்குளம் கடலுக்கு இரவுவேளையில் பயணிக்கின்றனர். பாதையின் இருபகுதியிலும் உள்ள காட்டுப் பகுதியில் யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மீனவர்கள் தொழிலுக்கு செல்லாது வீடு திரும்பியுள்ளனர்.
இதன் காரணமாக தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள மீனவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.