எதிர்க் கட்சித் தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை சபாநாயகர் கரு ஜயசூரிய நியமித்தார்.
இதனையடுத்து பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச சபையில் எழுந்து “ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் எம்.பி. குமார வெல்கமவை எதிர்க் கட்சித் தலைவராக நியமிக்க வேண்டும் என 56 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கோரிக்கை கடிதம் பாராளுமன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. எனினும் எந்த அடிப்படையில் சம்பந்தன் எதிர்க் கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார்?” என கேள்வியெழுப்பினார்.
இதற்கு பதிலளித்த சபாநாயகர் கருஜயசூரிய ‘இதுவரை மன்றுக்கு கடிதம் கிடைக்கவில்லை’ என்றார்.
இதன்போது சபையில் கூக்குரல் எழுந்த போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ‘ எதிர்க் கட்சித் தலைவர் தொடர்பான தீர்மானத்தை சபாநாயகர் அறிவித்து விட்டார்.
இது தொடர்பில் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. யாரும் குரங்கு போன்று நாடகமாட முடியாது. இப்போதைய பாராளுமன்றத்தை முன்னைய பாராளுமன்றம் போல் முன்னெடுத்து செல்ல முடியாது என்றார்.