மரண தண்டனை குறித்தும்
மீண்டும் விவாதிக்கப்படும்!!
பிரான்ஸின் அதிபர் தேர்தலின் இறுதிச் சுற்றில் எதிரும் புதிருமாக மோதவிருக்
கின்ற மக்ரோனும் மரின் லூ பென்னும் தேசியப் பிரச்சினைகளில் ஒருவரை ஒருவர் நேரடியாகத் தாக்குகின்ற வித
மான கருத்துக்களை வெளியிட்டுவரு
கின்றனர்.
“தனி மனித சுதந்திரங்களை மதிக்காத
தீவிர வலதுசாரி முகம் மீண்டும் எம்மை
நெருங்கி வருகிறது. நாடு சர்வாதிகாரத்
தின் பிடியில் வீழ்வதற்கான ஆரம்பத்தில் இருக்கிறது” – என்று லூ பென் மீது கண்
டனக் கணையை வீசியுள்ளார் மக்ரோன்.
அதிபர் பதவிக் காலத்தை மீண்டும் ஏழு
ஆண்டுகளாக நீடிக்கின்ற திரைமறைவு
திட்டத்தை லூ பென் ரகசியமாகத் தன்
னுடன் வைத்திருக்கிறார் என்றும் மக்
ரோன் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில்
தெரிவித்திருக்கிறார்.
நடக்கப் போகின்ற இறுதிச் சுற்றை ஐரோப்பிய ஒன்றியம் மீதான ஒரு சர்வ
ஜன வாக்கெடுப்பாகவும் எடுத்துக் கொள்ள முடியும் எனவும் மக்ரோன் கூறி
யிருக்கிறார். அதேசமயம் லூ பென்
அதிபராக வெற்றி பெற்றால் முதலாவது
வேலையாகக் குடியேற்றம் தொடர்பில்
நாட்டு மக்களின் கருத்தை அறிவதற்கு
உடனடியாக ஒரு சர்வஜன வாக்கெடுப்பு
நடத்தப்படும் என்று அவரது கட்சியின்
பேச்சாளர் ஒருவர் கூறியிருக்கிறார்.
நீங்கள் ஆட்சிக்கு வந்தால் மரண தண்
டனையை மறுபடியும் அமுல்ப்படுத்து
கின்ற திட்டம் உள்ளதா? என்று ஊடகம்
ஒன்று மரின் லூ பெனிடம் கேட்டது.
அதற்கு அவர்,”தடை செய்யப்பட்ட விவா
தங்கள் எதுவும் ஜனநாயகத்தில் கிடை
யாது”என்று கூறி அது பற்றியும் கருத்து
அறியப்படும் என்பதைக் கோடி காட்டி
னார்.
நாட்டில் பெரும் விலை அதிகரிப்பும் வாழ்க்கைச் செலவு நெருக்கடியும் வர
விருக்கின்றது. மக்ரோன் இவை பற்றி எதுவுமே அறியாதவராக இருக்கிறார்.
மக்களின் சுமைகளைக் குறைக்க அவரி
டம் எந்தத் திட்டமும் இல்லை- என்று மரின் லூ பென் குற்றம் சுமத்தியுள்ளார்.
🔵லூ பென் வென்றால்…
எத்துவா பிலிப் கருத்து..
நான் லூ ஹார்வ் நகர மேயராகத் தொடர்
ந்தும் நீடிக்கவே விரும்புகிறேன். ஆயி
னும் நடக்கவிருக்கும் தேர்தலில் லூ பென் அம்மையார் வெற்றிபெற நேர்ந்
தால் அதன் பிறகு நடைபெறப்போகின்ற
நாடாளுமன்றத் தேர்தலில் குதிப்பது பற்றிப் பரிசீலிக்க நேரலாம். – இவ்வாறு
முன்னாள் பிரதமர் எத்துவா பிலிப்
(Edouard Philippe) தெரிவித்திருக்கிறார்.
இம்முறை தேசியவாதியான மரின் லூ
பென், மக்ரோனைத் தோற்கடிப்பதற்கான
சாத்தியங்கள் அதிகம் என்பதை அவர்
தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறார்.
🔵சார்கோசியுடன் உடன்பாடா?
இதேவேளை, முன்னாள் அதிபர் நிக்க
லஸ் சார்க்கோசி, தனது வாக்கை மக்ரோ
னுக்கே செலுத்துவார் என்பதைத் தனது
சமூக ஊடகத்தில் வெளியிட்டிருந்தார்.
நாடாளுமன்றத் தேர்தலில் மக்ரோனின்
கட்சியுடன் உடன்படிக்கை ஒன்றைச்
செய்துகொள்ளும் உள் நோக்கத்துடனே
யே அவர் அவ்வாறு அறிவித்திருக்கிறார்
என்று அரசியலில் வட்டாரங்களில் பேச்
சடிபடுகிறது. ஆனால் சார்க்கோசியுடன்
அவ்வாறு எந்த உடன்பாடும் கிடையாது
என்று மக்ரோனின் கட்சி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
-பாரிஸிலிருந்து குமாரதாஸன்.
13-04-2022