யாழில் இடம்பெற்ற கோரவிபத்தில் 10 வயதுச் சிறுவன் பலி!

0
93

தாயும் மகனும் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது லொறி மோதியதில் ஏற்பட்ட விபத்தில் சிறுவன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளான்.

இந்த விபத்து யாழ்ப்பாணம் சத்திர சந்தியில் நேற்று இடம்பெற்றுள்ளது.

லொறியின் சில் சிறுவனின் தலையில் ஏறியதால் சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளான்.

இச்சம்பவத்தில் யாழ்.தாவடியைச் சேர்ந்த அபித்தன் அபிநயன் (வயது10) என்ற சிறுவனே உயிழந்தவராவார்.

சம்பவ இடத்தில் ஒன்று கூடியவர்கள் லொறியின் மீது தாக்குதல் நடாத்தியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here