விடாது கண்காணித்து அவற்றின் வீரியம் அறிவதில் WHO மும்முரம்
சீனாவின் ஷாங்காய் மாநகரில்
மக்கள் வாழ்வு முழு முடக்கத்தில்!
முழுமையாக இரண்டு ஆண்டுகள் கடந்த
நிலையிலும் பெருந் தொற்று நோய் உல
கிலிருந்து இன்னமும் விலகிச் செல்வ
தாக இல்லை.கொரோனா குடும்பத்தின்
திரிபுகளின் உப திரிபுகள் – குட்டிகளின்
குட்டிகளாகத் -தொடர்ந்தும் பிறப்பெடுத்
துப் பரவிக்கொண்டிருக்கின்றன.
கொரோனா வைரஸின் ஒமெக்ரோன்
திரிபின் அடுத்த இரண்டு உப திரிபுகளை
(new subvariants of the omicron variant) தீவி
ரமாகக் கண்காணித்து வருவதாக உலக
சுகாதார நிறுவனம்(WHO) திங்கட்கிழமை தெரிவித்திருக்கிறது.பிஏ1 என்ற ஒமெக்
ரோன் திரிபின் (BA.1 omicron variant) உற்
றார், உறவினர் – என நம்பப்படும் பிஏ4
(BA.4) மற்றும் பிஏ5(BA.5) என்ற இரண்டு
உப திரிபுகளின் வீரியம், உயிர் ஆபத்தை
ஏற்படுத்தும் தன்மை என்பவற்றை நிபு
ணர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வரு
கின்றனர் என்று சுகாதார நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
ஒமெக்ரோன், டெல்ரா போன்ற திரிபுக
ளின் உப திரிபுகள் தனித்தனியாகவும்
கலப்பு வடிவங்களிலும் ஏற்கனவே பரவி
யுள்ளன. அவை வேகமாகப் பரவுகின்ற
போதிலும் நோய்த் தொற்று அறிகுறிகள்
மிகக் குறைந்த அளவிலேயே காணப்படு
கின்றன.சீனாவில் இருந்து பரவத் தொட
ங்கியதாக நம்பப்படுகின்ற கோவிட் – 19
வைரஸ் குடும்பம் இவ்வாறு பல்கிப் பெரு
குவது எதிர்பார்க்கப்பட்ட ஒன்று தான்
என்றாலும் அவற்றில் ஏதாவது ஒரு திரிபு
வீரியம் மிக்கதாக மாறி மற்றொரு பெரும்
தொற்றை ஏற்படுத்தி உலகை மீண்டும்
முடக்கிவிடக் கூடும் என்பதில் நிபுணர்
கள் மிக விழிப்பாக இருந்துவருகின்றனர்
இதேவேளை, சீனாவின் பெரு நகரங்க
ளில் ஒன்றாகிய ஷாங்காய் கடந்த சில
வாரங்களாக மூடி முடக்கப்பட்டிருக்கிறது.
அங்கு தினசரி தொற்றுக்கள் திடீரென அதிகரித்ததை அடுத்தே நகர மக்களை வீடுகளுக்குள்ளேயே முடக்கிவைத்திருக்
கின்ற தடுப்பு உத்தியை அதிகாரிகள்
கண்டிப்பாக நடைமுறைப்படுத்தி வரு
கின்றனர். உணவு, மருந்து உட்பட அத்தி
யாவசியப் பொருள்கள் அனைத்துமே
வீடுகளுக்கு நேரடியாக விநியோகிக்கப்
பட்டு வருகின்றன. இந்த முடக்கம் காரண மாக ஷாங்காயில் வசிக்கும் சுமார் ஐயா
யிரம் பிரெஞ்சுப் பிரஜைகள் தேர்தலில்
வாக்களிக்கச் செல்ல முடியாமற்போய்
விட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஷாங்காய் நகர நிலைவரத்தை உன்னிப்
பாக அவதானித்து வருவதாக உலக சுகா
தார அமைப்பு தெரிவித்துள்ளது.
(படம் :ஷாங்காய் நகரில் தொற்றுத் தடுப்புப் பணியாளர்கள்.)
-பாரிஸிலிருந்து குமாரதாஸன்.
12-04-2022