GotaGoHome என்ற கோஷத்துடன் அரசை வீட்டுக்கு அனுப்பாமல் வீடு திரும்ப மாட்டோம் என்று கொழும்பில் கூடி இருக்கும் இளைஞர் கூட்டம் இளைப்பாறுவதற்காக அமைக்கப்பட்டுள்ள தற்காலிக குடில்கள் அமைந்துள்ள பகுதியை அவர்கள் “கோடா கோ கம(ஊர்)” என பெயரிட்டுள்ளார்கள்.
கொழும்பு காலி முகத்திடல் பகுதியில் அமைந்துள்ள இக்கிராமத்தில் இரவு பகல் பாராமல் தொடர்ச்சியாக இளையோர்களோடு இணைந்து கடும் மழைக்கு மத்தியில் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இது முள்ளிவாய்க்கால் இறுதி யுத்த கால அவலத்தில் போரை நிறுத்தக் கோரியும் அப்பாவி மக்களின் உயிரைக் காக்கக் கோரியும் புலம்பெயர் தேசங்களில் எம் தமிழ் மக்கள் கடும் குளிருக்கு மத்தியில் – கொட்டும் மழைக்கு மத்தியில் – கூடாரங்களை அமைத்து இரவு பகல் பாராமல் தொடர்ச்சியாகப் போராட்டங்களில் ஈடுபட்ட போதும் இந்த சர்வதேசம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததை நினைவுபடுத்துவதாக அமைந்துள்ளது.