ஐ.நா.மனித உரிமைகள் அமைப்பில்
ரஷ்யாவின் உறுப்புரிமை நிறுத்தம்!!
உக்ரைனின் கிழக்குப் பிராந்தியம் மீது
பெரும் போர் தொடுப்பதற்கான ஏற்பா
டுகளை ரஷ்யப்படைகள் ஆரம்பித்துள்
ளன. இதர பல பகுதிகளில் இருந்து திருப்பி அழைக்கப்பட்ட பல்லாயிரக்க
ணக்கான படையினரையும் யுத்த டாங்கி
களையும் பயன்படுத்தி டொன்பாஸ் பிரா
ந்தியத்தை முழுவதுமாகக் கைப்பற்றும்
முனைப்புடன் கடும் குண்டுத் தாக்குதல்
களை ரஷ்யா ஆரம்பித்திருப்பதாக செய்
திகள் வெளியாகியுள்ளன.
ரஷ்ய ஆதரவு பெற்ற கிளர்ச்சிப்படைக
ளது கட்டுப்பாட்டில் இயங்கும் இரண்டு
தன்னாட்சிப் பிரதேசங்களை உள்ளடக்
கிய டொன்பாஸ் (Donbas Region) உக்ரை
னின் கிழக்கே ரஷ்யாவின் எல்லையோடு அமைந்திருக்கிறது .உக்ரைனின் நிலக்
கரி மற்றும் இரும்பு மையமாக விளங்கும்
இந்தப் பிராந்தியத்தை முழுவதுமாகக்
கைப்பற்றி ரஷ்யாவோடு இணைப்பதற்
கான இலக்கில் மொஸ்கோ அங்கு ஒரு
பாரிய மோதலுக்குத் தயாராகிவருவதாக
மேற்குலக நாடுகள் கூறுகின்றன.
அங்கு குவிக்கப்பட்டுவரும் துருப்புகள், டாங்கிகள், கவச வாகனங்கள், விமானங்
கள், ஆட்டிலறிகளின் விசாலத்தை நோக்
குகையில் அது இரண்டாவது உலக யுத்
தத்தை நினைவூட்டுவதாக உக்ரைனின்
வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்
ளார்.டொன்பாஸ் பிராந்திய மக்களைப்
பாதுகாப்பதற்கு மேலும் ஆயுத உதவி
களைத் தருமாறு உக்ரைன் அரசு நேட்டோ
நாடுகளைக் கேட்டுள்ளது. பிரிட்டன் முதல் தடவையாக உக்ரைனுக்குத் தனது
இராணுவ டாங்கிகளை நேரடியாக வழங்
கவுள்ளது எனச் செய்தி வெளியாகியுள்
ளது.
தலைநகர் கீவுக்கு அருகே ரஷ்யப்படை
வெளியேறிய பூட்சா என்ற பகுதியில் பெரும் மனிதப் படுகொலைகள் நிகழ்ந்
திருப்பது தெரிய வந்ததை அடுத்து இரு
தரப்பினருக்கும் இடையிலான அமைதிப்
பேச்சு முயற்சிகள் பின்னடைவைச் சந்தி
த்துள்ளன.அந்த நிலையிலேயே அடுத்த சில நாட்களில் கிழக்குப் பிராந்தியத்தில் பெரும் போர் மூழும் அச்சம் எழுந்துள்ளது
இதேவேளை,
ஐ. நா.மனித உரிமைகள் கவுன்ஸிலின்
உறுப்புரிமையில் இருந்து ரஷ்யா இடை
நிறுத்தப்பட்டிருக்கிறது.நியூயோர்க்கில் பொதுச் சபையில் இன்று நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம் உட்பட 93 நாடுகள் ஆதரவாக வாக்களித்துள்ளன. சீனா, சிரி
யா,பெலாரஸ் உட்பட 24 நாடுகள் எதிர்த்து
வாக்களித்தன. இந்தியா, எகிப்து, தென்
ஆபிரிக்கா உட்பட 58 நாடுகள் வாக்கெடு
ப்பில் கலந்துகொள்ளவில்லை.
ஐ.நாவின் வாக்கெடுப்பை வரவேற்றிரு
க்கும் உக்ரைன்,”மனித உரிமைகளைப்
பாதுகாக்கின்ற ஐ. நா. அமைப்புகளில்
போர்க் குற்றவாளிகளுக்கு இடமில்லை” என்று தெரிவித்திருக்கிறது.
-பாரிஸிலிருந்து குமாரதாஸன்.
07-04-2022