முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் உள்ள ஏம்பல் குளத்தினை அளவீடு செய்வதற்காக படகில் சென்ற உத்தியோகத்தர்களின் படகு கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று மாலை 3.00 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் வித்தியாபுரம் ஒட்டுசுட்டானைச் சேர்ந்த நமசிவாயம் டிலக்சன் (வயது 25) என்ற நில அளவைத்திணைக்கள உத்தியோகத்தரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் ஒட்டுசுட்டான் பிரதேச இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.
ஒட்டுசுட்டான் காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து சடலத்தினை மீட்டு முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டுசென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.