நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு
தேர்தலை அறிவிக்க கோட்டா திட்டம்?
சிறிலங்காவில் அரசுக்கு எதிரான ஆர்ப்
பாட்டங்கள் தொடர்ந்து நீடிக்கும் நிலை
யில் நாடு முழுவதும் பிரகடனப்படுத்தப்
பட்டிருந்த பொது அவசரகாலச் சட்ட விதி
களை அதிபர் கோட்டாபய ராஜபக்ச திடீ
ரென நீக்கியிருக்கிறார். அதிபரது தனிப்
பட்ட வாசஸ்தலத்தை ஆர்ப்பாட்டக்காரர்
கள் முற்றுகையிட முயன்றதை அடுத்து
கடந்த முதலாம் திகதி நாடெங்கும் அவசர
காலச் சட்ட விதிகளை நடைமுறைப்படுத்
துகின்ற அதிவிசேட அரசிதழ் ஒன்றை
கோட்டாபய விடுத்திருந்தார். ஆனால்
இன்னமும் அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்
கள் தணியாத நிலையில் அவசரகாலச்
சட்ட விதிகளை அவசரப்பட்டு நீக்குகின்ற
அறிவிப்பை இன்றிரவு அதிபர் வெளியிட்
டிருக்கிறார் எனக் கொழும்புச் செய்திகள்
தெரிவிக்கின்றன.
அமைதியான வழிமுறைகளில் மக்கள்
நடத்துகின்ற ஆர்ப்பாட்டங்களை ஒடுக்க
அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்து
வதற்கு அமெரிக்கா உட்பட மேற்கு நாடு
கள் தங்கள் ஆட்சேபத்தை வெளியிட்டி
ருந்தமை குறிப்பிடத்தக்கது.
கோட்டாபயவின் அரசாங்கத்தின் அமைச்
சர்வையில் பிரதமர் தவிர்ந்த அனைவ
ருமே பதவி விலகிவிட்டனர். அமைச்சுப் பொறுப்புகளைப் பங்கிட முன்வருமாறு சகல கட்சிகளுக்கும் அதிபர் விடுத்த வேண்டுகோளைப் பிரதான எதிர்க்கட்சி
கள் நிராகரித்துள்ளன.கோட்டாபய உட்
பட ராஜபக்ச பரம்பரையினர் அனைவ
ருமே பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
நாடாளுமன்றம் இன்று கூடிய போது
கோட்டாபயவின் கூட்டணி அரசில் இடம்பெறும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் சுமார் 42பேர் தனித்து-சுயாதீனக் குழுக்
களாகப்-பிரிந்ததை அடுத்து ஆளும்தரப்பு பெரும்பான்மையை இழந்துள்ளது.
மகிந்த ராஜபக்ச பதவிவிலகி புதிய பிர
தமர் தலைமையில் இடைக்கால அரசு
ஒன்று நிறுவப்படவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் அதிபர் கோட்டாபயவைப்
பதவி விலகுமாறு கேட்டு நாடெங்கும்
புதிதாக ஆர்ப்பாட்டங்கள் வெடித்துள்ளன
கொழும்பு நாடாளுமன்றத்துக்கு அருகே
ஆர்ப்பாட்டம் நடத்திய மக்கள் கூட்டத்தின
ரிடையே இராணுவ வீரர்கள் எனச் சந்தே
கிக்கப்படுவோர் மோட்டார் சைக்கிள்களு
டன் நுழைந்து மிரட்டல் விடுத்தனர்
என்று கூறப்படுகிறது. அதன்போது
அங்கு பொலீஸாருக்கும் இராணுவத்தி
னருக்கும் இடையே வாய்த் தர்க்கம் ஏற்
பட்டதாகவும் அது தொடர்பாக விசாரிப்
பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும்
கொழும்பு செய்தி ஊடகங்கள் தெரிவித்
துள்ளன.
இந்த நிலையில் அவசரகாலச் சட்ட விதி
களை அதிபர் எதற்காக உடனேயே நீக்
கியுள்ளார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இடைக்கால அரசு ஒன்றை அமைப்பதற்
கான வாய்ப்புகளைத்தவிர்த்து நேரடியா
கவே பொதுத் தேர்தலை அறிவிக்கின்ற
நோக்கத்துடனேயே அவசரகாலச் சட்ட
விதிகளை அதிபர் கோட்டாபய நீக்கியுள்ளார் என நம்பப்படுகிறது.
-பாரிஸிலிருந்து குமாரதாஸன்.
05-04-2022