யாழ்ப்பாண பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பாசையூர் இரண்டாம் குறுக்குத் தெரு வீதி பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாக வீடு ஒன்று முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.
வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு உந்துருளிகள் மற்றும் மின் பிறப்பாக்கி இயந்திரம் என்பன உள்ளிட்ட பல பெறுமதியான பொருட்கள் உடைமைகள் எரிந்து நாசமாகி உள்ளன.
சம்பவம் இடம்பெற்றவேளை வீட்டில் உள்ளவர்கள் வெளியில் சென்ற நிலையில் குறித்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாகவும் –
சம்பவம் விபத்தா அல்லது விசமிகளின் வேலையா எனத் தெரியவரவில்லை எனவும் –
அயலவர் ஒருவர் எரிமலைக்குத் தெரிவித்தார்.