அமெரிக்காவில் ‘கணேஷ் கோயில் தெரு’ எனும் பெயரில் வீதி!

0
294

அமெரிக்காவில் இந்து மக்களை கௌரவிக்கும் வகையில் வீதியொன்றுக்கு ‘கணேஷ் கோயில் தெரு’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இச்செயலானது அப்பகுதி மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவின் நியூயோர்க் நகரின் வடமத்திய பகுதியில் குயூன்ஸ்7 கம்யூனிட்டி மாவட்ட பிளஷ்சிங் நகரில் ஹோலி அவன்யூ, 45 ஆவது அவன்யூ இடையில் அமைந்துள்ளது பெளனி தெரு.

இந்தப் பகுதியின் சுற்றுப் பகுதியில் கொரியா, தாய்வான் மற்றும் இந்திய கலாசார மையங்கள், வர்த்தக நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் அமைந்துள்ளன.

இங்கு ‘வல்லப கணபதி தேவஸ்தானம்’ என்ற பெயரில் ஒரு கோயிலும் உள்ளது. இங்கு பக்தர்கள் பலர் வந்து தரிசனம் செய்து வருகின்றனர். முக்கிய திருவிழாக்களில் அமெரிக்க வாழ் இந்து பக்தர்கள் அதிகம் கூடுவர். இந்நிலையில் இந்துக்களை கௌரவிக்கும் வகையில் அமெரிக்கா , இந்த பெளனி தெருவுக்கு ‘கணேஷ் கோயில்’ என்று பெயரை மாற்றி முறையான தகவல் பலகையும் அமைத்துள்ளது. இந்த பெயர் மாற்றம் தொடர்பாக நியூயோர்க் சிட்டி கவுன்சில் உறுப்பினர் பீட்டர் ஏ. கூ. தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கவுன்சில் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இத்தகவலை அவரே சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதனை வடஅமெரிக்காவின் ‘இந்து டெம்பிள் சொஷை ட்டியும்’ உறுதி செய்துள்ளது.

முறைப்படி அங்கீகரிக்கப்பட்டவுடன் சிட்டி கவுன்சில் வரைபடத்திலும் இந்த கணேஷ் கோயில் தெரு பெயர் இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here