ரஷ்யா படையெடுக்காது என நம்பிய பிரான்ஸின் கணிப்புத் தோல்வியா? உளவுப் பணிப்பாளர் பதவி விலகல்!

0
304

பிரான்ஸில் இராணுவத்தின் புலனாய்
வுப் பணிப்பாளர் பதவி விலகியுள்ளார்
எனச் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஜெனரல் எரிக் விடாட் (Eric Vidaud) கடந்த
ஆண்டு நடுப்பகுதியிலேயே புலனாய்வுத்
துறைப் பணியகத்தின் பொறுப்பாளராக
நியமிக்கப்பட்டிருந்தார்.

“போதிய விளக்கம் அளித்தல் மற்றும் துறைசார் அனுபவக்குறைவு” போன்ற
விமர்சனங்கள் அவர் மீது எழுந்துள்ளன
என்று பாரிஸ் செய்தி ஊடகம் ஒன்று
தெரிவித்துள்ளது.ஆனால் அவரது பதவி
விலகலை இராணுவத் தலைமை இன்ன
மும் உறுதிப்படுத்தவில்லை.

எல்லையில் படைகளைக் குவிக்கத் தொடங்கிய ஆரம்பத்தில்இருந்தே ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமிக்கப் போகின்றது
என்பதை அமெரிக்கா மற்றும் பிரிட்டிஷ்
புலனாய்வு சேவைகள் தொடர்ந்து எச்ச
ரித்து வந்தன. ஆனால் பிரான்ஸின் உளவுத்துறை போர் மூளப் போகிறது என்பதற்கான சாத்தியங்களைக் குறை
வாகவே மதிப்பிட்டிருந்தது என்று சொல்
லப்படுகிறது.

கடந்த ஆண்டு ஜெனரல் எரிக் பதவிக்கு
வந்த சில நாட்களிலேயே ஆஸ்திரேலியா
வுடனான நீர்மூழ்கி விவகாரத்தில் பாரிஸ்
ஏமாற்றமடைய நேரிட்டது.பல பில்லியன்
பெறுமதியான ஒப்பந்தத்தில் ஆஸ்திரே
லியா பிரான்ஸின் காலை வாரவுள்ளது
என்பதை முன்கூட்டியே மதிப்பிடுவதில்
பிரான்ஸின் உளவுத்துறை தவறிவிட்டது
என்ற குற்றச்சாட்டை அவர் அச்சமயம்
எதிர்கொள்ள நேரிட்டது.

ஆயினும் ஜெனரல் எரிக் விடாட்டின் பத
விக்குரிய பணி நாட்டின் படை நடவடிக்
கைகள் சம்பந்தப்பட்டதே தவிர வெளிநா
டுகளது போர்களை எதிர்வு கூறுவது
அல்ல என்று வேறு சில இராணுவ வட்டா
ரங்கள் ஏஎப்பி செய்தி நிறுவனத்திடம்
கூறியுள்ளன. ரஷ்யாவின் படையெடுப்
புக்கு இராணுவப் புலனாய்வுப் பொறுப்
பாளர் மீது குறை சுமத்துவது இலகுவா
னது. ஆனால் உண்மையில் அதற்கான
பொறுப்பைச் சகல உளவு சேவைகளின்
சமூகமே ஒட்டுமொத்தமாக ஏற்றுக்
கொள்ள வேண்டும் என்று இராணுவ ஆய்வாளர் ஒருவர் குறிப்பிட்டிருக்கி
றார்.

அதிபர் மக்ரோன் புடினுடன் அடிக்கடித் தொடர்புகளைப் பேணி வருகின்ற ஐரோப்பியத் தலைவராக விளங்குகி
றார். கடந்த பெப்ரவரி 24 அன்று ரஷ்யப்
படை நடவடிக்கை தொடங்கிய பிறகு
புடினுடன் ஒரு டசினுக்கும் அதிக தடவை
தொலைபேசியில் அவரோடு பேசியுள்ளார் மக்ரோன்.

           -பாரிஸிலிருந்து குமாரதாஸன்.
                                              01-04-2022

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here