பிரான்ஸிலும் சில ஐரோப்பிய நாடுகளி
லும் சில நாட்கள் நீடித்த இதமான வசந்த கால வெயிலுக்குப் பிறகு இந்த வார இறுதியில் கடும் குளிர் வருகிறது.
மரங்களில் குறிப்பாகப் பழத் தோட்டங்
களில் பூக்களும் பிஞ்சுகளும் தோன்று
கின்ற சமயத்தில் எதிர்பாராத விதமாக
இவ்வாறு காலம் தவறிப் பனியும் மழை
யும் தோன்றுவது விளைச்சலில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்வு கூறப்படுகிறது. பிரான்ஸின் சகல பகுதி
களையும் குளிர் காற்று மற்றும் பனி மூட்டம் பாதிக்கும் என்று வானிலை அவதானிகள் தெரிவித்திருக்கின்றனர். நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை மைனஸ் 2-3 பாகை வரை குறையக்
கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் வட பகுதியில் 5 முதல் 10செ.மீ.
பனிப் பொழிவு இருக்கக்கூடும் என்று Météo France எச்சரித்துள்ளது. பாரிஸ்
பிராந்தியம் உட்பட பல மாவட்டங்களில்
செம்மஞ்சள் எச்சரிக்கை(vigilance orange)
விடுக்கப்பட்டிருக்கிறது.
பழத் தோட்டங்களில் பூக்கள், பிஞ்சுக
ளில் பனி படிந்து உறைவதைத் தடுப்ப
தற்காகக் குறிப்பிட்ட நேர இடைவெளிக
ளில் அவற்றின் மீது தண்ணீர் தெளிக்கு
மாறு பழச்செய்கையாளர்களுக்கு ஆலோ
சனைகள் வழங்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டிலும் ஏப்ரல் மாதம் இது போன்றே காலம் தப்பிப் பெய்த பனியி
னால் சில பழ வகைகளின் அறுவடை
யில் சுமார் 50 முதல் 85 வீதமான இழப்பு
ஏற்பட்டிருந்தது.வைன் தோட்டங்களும் பாதிப்பைச் சந்தித்திருந்தன.
குமாரதாஸன். 31-03-2022
பாரிஸ்.