தமிழீழத்  தேசியத் தலைவர்  பயங்கரவாதி அல்ல என யாழில் ஒருவர் போராட்டம்!

0
159

தமிழீழத்  தேசியத் தலைவர்  பிரபாகரன் பயங்கரவாதி அல்ல என தெரிவித்து நபரொருவரால் யாழில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 

குறித்த போராட்டம் யாழ்ப்பாணம் பிரதான வீதியில் இன்று காலை 7.30 மணி முதல் முன்னெடுக்கப்பட்டு வருவதாக யாழ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த நபர் தமிழீழத்  தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன்    அவர்களின் புகைப்படத்தை காட்சிப்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். 

அத்துடன் நாட்டில் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளக் கூடியவர் பிரபாகரன் தான் எனவும் இன்னும் பல விடயங்களையும் சிங்கள மொழியில் உரக்கக்கூறி குறித்த தென்பகுதி நபர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here