பிரான்சில் சிறப்புடன் நடைபெற்ற ஆற்றுகை வெளிப்பாட்டுத்தேர்வு 2022!

0
396

அனைத்துலத் தமிழ்க்கலை நிறுவகம் – தமிழ்ச்சோலை தலைமைப்பணியகம் – பிரான்சு இணைந்து ஆண்டு தோறும் நடாத்தும் ஆற்றுகை வெளிபாட்டுத் தேர்வு 2022 ல் பிரான்சு பாரிசின் கார்லே – கோனேஸ் Garges- lés Gonesse என்னும் நகரத்தில் Espace Associatif Des Doucettes மண்டபத்தில் நடைபெற்றிருந்தது.


27.03.2022 காலை 10.00 மணிக்கு அகவணக்கத்துடன் இறைவணக்கம் இடம் பெற்றது. பரதக்கலையின் கடவுளாகிய நடராசர் உருவச்சிலைக்கான ஒளியேற்றலினை மூத்த கலைஞர்கள் திருவாட்டி. கோமளா கந்தையா திருவாட்டி. அம்பிகை பாலகுமாரு திருவாட்டி. கௌசலா ஆனந்தராஐh அவர்களுடன் நடனஆசிரிகைகள் திருவாட்டி. அனுசா மணிவண்ணன் திருவாட்டி. வினோதா செந்தூரன் ஆகியோர் ஏற்றி வைத்தனர்.
தொடர்ந்து மங்கல விளக்கேற்றி வைக்கப்பட்டது. கார்லே கோனேஸ் நகரபிதா M. Benit Jiménez உதவி நகரபிதா திருவாட்டி. Mme. Marie Claude Lalliaud மற்றும் மாநகரசபையின் அனைத்து கட்டமைப்புக்களின் பொறுப்பாளர், மாநகரசபை உறுப்பினர் இவர்களுடன் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சின் பொறுப்பாளர் திரு. மகேஸ், தமிழ்ச்சோலை தலைமைப்பணியகப் பொறுப்பாளர் திரு.ஜெயக்குமாரன் இன்றைய தேர்வின் பரதநாட்டிய நடுவர்களான முனைவர். திருவாட்டி. சந்திரவதனி விஐயசுந்தரம் அவர்கள், முதுகலைமாணி திருவாட்டி.அனுசா சற்குணநாதன் அவர்கள், முதுகலைமாணி திருவாட்டி. ஜெயந்தி யோகலிங்கம் அவர்கள் ஆகியோருடன் இசை நடுவர்களான இசைக்கலைமணி திருமதி. ஆறுமுகம் ஜெகசோதி அவர்கள், இசைக்கலைமணி திருவாட்டி. கௌரி ஜெகசோதி அவர்கள், இசைக்கலைமணி. திருவாட்டி சாமிளா நடேசன் அவர்களும் ஏற்றி வைத்தனர்.


வரவேற்புரையை தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியக செயலாளர் திரு காணிக்கைநாதன் அவர்கள் ஆற்றியிருந்தார்.
நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட முதல்வர், துணை முதல்வர், கலைப்பிரிவு பொறுப்பாளர்கள் ஆகியோர், தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் செயலாளர் திரு. காணிக்கைநாதன், பொருளாளர். திரு பேரின்பமூர்த்தி, பிரதான செயற்பாட்டாளர்கள். திரு. அகிலன் திரு. நாகயோதீஸ்வரன் மற்றும் 95 தமிழர் விளையாட்டுக்கழகப் பொறுப்பாளர் திரு. ரமேஸ் ஆகியோர் பொன்னாடை போர்த்தியும் மலர் கொத்து வழங்கியும் மதிப்பளித்தனர்.


மாநகர முதல்வர் தனது வாழ்த்து உரையில் தமிழ்மக்களுடனான தனது ஆழமான உறவு இருந்து வருவதையும், அவர்களின் கலை பண்பாடுகளை தான் மதிப்பதாகவும், ஒரு பாரம் பரிய கலைகளை தலைமுறைக்கு தகுதிவாய்ந்ததாக எடுத்துச் செல்லும் இச்செயற்பாடுகள் மிகுந்த பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் உரியது என்றும் தொடர்ந்து தமது தரப்பில் நல்ல உறவோடு பயணிக்கும் எனவும் தெரிவித்திருந்தார்.
இக்கலையையும் நடனத்தையும் பல்கலைக்கழக மாணவர்கள், அரச கலைபீடத்தினர் பலர் நடனக்கலையின் ஆற்றுகைத்திறனை 4 மணிநேரத்திற்கு மேலாக கண்டு களித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆற்றுகை வெளிபாட்டுத்தேர்வில் முதலில் நடனம் இடம் பெற்றது.
கலாலயம் ஆசிரியை திருவாட்டி. கௌசலா ஆனந்தராஜா அவர்களின் மாணவி செல்வி. சிவேதா புவனதவபரன் அவர்களும், அடுத்து செல் தமிச்சோலை ஆசிரியை திருவாட்டி. வினோதா செந்தூரன் அவர்களின் மாணவி செல்வி. சபிதா சிவசுப்பிரமணியம் அவர்களும், சலங்கை ஒலி கல்லூரி ஆசிரியை திருவாட்டி அனுசா மணிவண்ணன் அவர்களின் மாணவியும், சோதியா கலைக்கல்லூரியின் மாணவியுமான செல்வி.தர்ஜிதா தர்மகுலசிங்கம் ஆகியோர் தமது திறன்களை அழகாக நடுவர்களுக்கும், மக்கள் சபையின் முன்னால் வழங்கியிருந்தனர்.


சிறப்புரை இடம் பெற்றது.

சிறப்புரையை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர் நிகழ்த்தியிருந்தார். கலையும், மொழியும் எமது கண்களைபோல நாம் கொண்டாலும் எமது மண்ணும், அதன் விடுதலையும் இன்றைய காலத்தேவையின் மிக அவசியமானது என்றும் எமது கலைக்குழந்தைகளை இனத்தின் சிறந்த தகுதிவாய்ந்தவர்களாக காட்டும் இவ் ஆற்றுகை வெளிபாட்டுத்தேர்வும் அதன் முக்கியமும், அதனை நேர்த்தியாக அனைத்துலக தமிழ்க்கலை நிறுவகத்துடன் தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியகம் பெரும் அர்ப்பணிப்புடன் முன்னெடுத்து வருவதும் அதில் கலைஆசியரியர்கள் தாங்களும் தங்கள் கலையால் உருவாக்கிய கலைப்பிள்ளைகளை தகுதிவாய்ந்தவர்களாக நடுவர்களின் அங்கீகாரத்துடன் உலகிற்கு காட்டுகின்ற ஓர் காலத்தின் அவசியமான செயற்பாடு என்றும், இதில் பங்கெடுத்த நடுவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், எமது தமிழ்மக்கள் அனைவருக்கும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் சார்பில் பாராட்டு தந்து நிற்கும் அதே வேளை கொடும்பேரிடர் கோவிட் 19 வைரசு தாக்கத்தில் பலரை நாம் இழந்து விட்ட போதும் இன்று அதனுடன் வாழக்கற்றுள்ள அதே வேளை இன்னெரு புறத்தில் வல்லரச நாடுகளின் போட்டிகளில் எம்மை சூழ்ந்து நிற்கும் போர் சூழலும், பொருளாதார துன்பத்தை இங்கும் அனுபவிக்க வேண்டி ஏற்படுமோ என்கின்ற ஏக்கமும், தாயகத்தில் இன்று ஏற்பட்டிருக்கும் கடன், அரசியல் புரட்சி, மக்கள் பட்டிணியைச் சந்திக்கும் அவலம் பற்றியும் இவையெல்லாம் தமிழீழ மக்களைப் பொறுத்தவரை ஒன்று புதிதல்ல இதனைபல தசாப்தங்களாக அனுபவித்து அனுபவப்பட்டிருக்கின்றோம் என்றும், நாம் தனியே கலையோடு, மொழியோடும் பண்பாட்டோடும் நின்றுவிடாது, அரசியலிலும் நாட்டம் காட்ட வேண்டும். அப்போது தான் இந்த கலைகளை நாம் எமது அடுத்த தலைமுறையிடம் கொண்டு போக முடியும் அதில் உள்ள ஆழமான விடயத்தை சிந்திக்க வேண்டும் என்றும், பிரான்சில் நடைபெறப்போகும் நாட்டின் அரச அதிபர் தேர்தல் பற்றியும், பாராளுமன்ற உறுப்பினர் தேர்தல் பற்றியும் தமிழ் மக்கள் அதில் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதோடு தொடர்ந்து வரும் காலங்களில் சுயபாதுகாப்பை நாம் ஒவ்வொருவரும் கடைப்பிடித்து தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியகத்தால் முன்னெடுக்கப்படும் அனைத்து செயற்பாடுகளுக்கும், தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, அதன் உப கட்டமைப்புக்கள் தேசம் நோக்கி முன்னெடுக்கவுள்ள செயற்பாடுகளும் மீண்டும் புத்துயிர் பெற்று பயணிக்கவுள்ளது என்றும் அதில் அனைத்து பிள்ளைகள் பெற்றோர்கள் பங்கு இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
தொர்ந்து குரலிசை தேர்வு நடைபெற்றது கீதாலயம் ஆசிரியை திருவாட்டி. அம்பிகை பாலகுமாரு அவர்களின் மாணவி திருவாட்டி. தீபனி ஜீவநாத் அவர்களும், சோதியா கலைக்கல்லூரி ஆசிரியை திருவாட்டி அம்பிகை பாலகுமாரு அவர்களின் மாணவி செல்வி. ஆரணி தர்மகுலசிங்கம் அவர்களும் ஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வாக வயலின் இடம்பெற்றது, கலாலயம் ஆசிரியை திருவாட்டி கோமளா கந்தையா அவர்களின் மாணவன். செல்வன். சாள்ஸ் பரமேஸ்வரலிங்கம் அவர்களுடைய வயலின் இடம்பெற்றது.
இவர்களுக்கான அணிசேர் கலைஞர்களாக வயலின் ஆசிரியை திருமதி அம்பிகை பாலகுமாரன் ( சங்கீதரத்தினம், சங்கீத கலாவித்தகர்), மிருதங்கம் செல்வன் வினோசாந்த் செல்வக்குமாரன், (இசைக்கலைமணி), வயலின் செல்வக்குமார் பிரசாந்த் ( இசைக்கலைமணி) வயலின் செல்வன். பிரசாத் பரமேஸ்வரன் ( சங்கீத கலாஜோதி, இசைக்கலைமணி) குரலிசை திரு. செகசோதி நிருஐன், மிருதங்கம் திரு. பிலிப்அன்று, மற்றும் கடம் வாத்தியங்கள் இசைக்கப்பட்டன. ஒவ்வொரு மாணவர்களுக்கும் தமது திறமைகளை நடுவர்களுக்கு ஒப்புவிக்க ஒன்றரைமணிநேரம் வழங்கப்பட்டது. அனைவரும் கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் செய்திருந்தனர். இத்திறனானது அதன் தேர்வானதும், தமது கலைவாழ்வில் முக்கியம் வாய்ந்ததாகவும், ஒவ்வொரு மாணவர்களும் உணர்ந்து பயின்று ஒப்புவித்திருந்தனர். இதனை பயிற்றுவித்த ஆசிரியர்களும் அதற்கான பயனை அடையவேண்டும் என்றும் அரும் பாடுபட்டிருந்தனர். தேர்வில் தேர்ச்சிபெற்று தகுந்தவர்களாக கலையுலகிற்கு காட்டிய இம்மாணவர்கள் தமது அடுத்த தலைமுறைக்கு அவற்றை தேவையான நேரத்தில் தேவையான வழியில் கொண்டு செல்லும் பெரும் கடமைபாடு உண்டு. நடனத்தைப் பொறுத்தவரை அந்த பலம் உண்டு என்ற போதும் ஏனைய தண்ணுமை ( மிருதங்கம், நரம்பிசைகளான வயலின், வீணை, தோல் வாத்தியங்களான கடம், மோட்சிங், கெஞ்சிரா போன்ற பக்க வாத்தியங்களிலும் இளங்கலைஞர் நாட்டமும், பங்கும் எடுக்க வேண்டும் என்ற பார்வையும் கலைநலன் விரும்பிகளின் எதிர்பார்ப்பாகவும் இருந்தது.


நிகழ்வின் அறிவிப்பை தமிழில் திரு. கிருஸ்ணா அவர்களும், பிரெஞ்சு மொழியில் செல்வி. கோபிகா அவர்களும் வழங்கியிருந்தனர். காலை 10 மணிமுதல் முதல் மாலை 7.00 மணிவரை தமது சுயபாதுகாப்பையும் உறுதிப்படுத்திக்கொண்டு மாறிமாறி மண்டபம் நிறைந்த கலைஆசிரியர்கள், மாணவர்கள், மக்களும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here