பைடனின் போலந்துப் பேருரைக்கு
எதிராக மக்ரோன் ஆட்சேபக்கருத்து
போரை மேலும் தீவிரமாக்கத் தூண்டு
கின்ற “செயல்கள்”, “வார்த்தைகள்” தவிர்க்கப்பட வேண்டும் என்று அதிபர் மக்ரோன் கூறியிருக்கிறார். ரஷ்ய அதி
பர் புடினை “சர்வாதிகாரி””கசாப்புக்கடை
க்காரர் “என்று வர்ணித்து ஜோ பைடன்
போலந்து நாட்டில் கூறிய வார்த்தைக
ளுக்கு எதிராகவே மக்ரோன் இவ்வாறு
கருத்து வெளியிட்டிருக்கிறார்.
” இதுபோன்ற வார்த்தைகளை நான்
பயன்படுத்தப் போவதில்லை. ஏனெ
னில் நான் புடினோடு தொடர்ந்தும்
பேச்சுக்களில் ஈடுபட்டுவருகிறேன்..”
என்றும் அவர் கூறியிருக்கிறார்.
“உக்ரைனில் ரஷ்யா தொடங்கியுள்ள போரை நாங்கள் போருக்குச் செல்லா மலேயே நிறுத்த விரும்புகிறோம். இதுவே எங்கள் குறிக்கோள்.நாம்
அதைச் செய்ய விரும்பினால், நமது வார்த்தைகளையோ செயலையோ தீவிரமாக்கக்கூடாது… “
“ஐரோப்பியர்கள் சில விரிவாக்கங்
களுக்கு அடிபணியக் கூடாது.நமது புவியியல் மற்றும் நமது வரலாற்றை மறந்துவிடக் கூடாது. நாங்கள் ரஷ்ய மக்களுடன் போரில் ஈடுபடவில்லை” என்று அவர் வலியுறுத்தினார்,
” ஐரோப்பா இனிமேலும் மொஸ்கோவிற்
கும் வோஷிங்டனுக்கும் இடையிலான
பனிப் போர்க் காலச் சூழ்நிலைக்குள்
இருக்கப் போவதில்லை “-என்பதையும்
மக்ரோன் சுட்டிக்காட்டியுள்ளார்.
போலந்து தலைநகர் வார்ஸோவில்
ஜே பைடன் ஆற்றிய பேருரையில்
புடினின் அதிகாரத்தை நேரடியாகவும்
தகாத வார்தைகளாலும்” உணர்ச்சிவசப்
பட்டுச்” சாடியுள்ளார் என்று சர்வதேச
அவதானிகள் கருதுகின்றனர். அரசியல்
படைபலம், பொருளாதார நிலைகளில்
பார்த்தால் அமெரிக்க அதிபர் இவ்வாறு
தனக்கு நிகரற்ற ரஷ்யா மீது கருத்துக்
களால் தாக்குவதற்கு அருகதையுடை
யவர் என்று வேறு சில கொள்கை வகுப்
பாளர்கள் கூறுகின்றனர்.
புடினின் கோபத்தைக் கிளறாமல் அவரை
அணுகிப் போரை முடிவுக்குக் கொண்டு
வர விரும்புகின்ற ஐரோப்பியத் தலைவ
ரான மக்ரோனை அமெரிக்காவின் போர்
விரிவாக்கப் பேச்சுகள் பொறுமையிழக்
கச் செய்துள்ளன. புடினுடன் தொடர்பைப்
பேணக் கூடிய ஒரே தலைவராகவும் புடின் செவிமடுக்கக் கூடிய குரலுடைய
ஒரே நண்பராகவும் விளங்கும் மக்ரோன்
ஐரோப்பாவின் பாதுகாப்புத் தொடர்பான
“யதார்த்த நோக்கத்தில்” மொஸ்கோவை
வெளியே விலக்கி வைக்க விரும்பாதவர்.
தார்மீக ரீதியில் நேட்டோவுக்கு ஆதரவா
கச் செயற்பட்டாலும் புடினோடு சமாதான
முறையில் இணக்கம் காண்பதிலேயே
மக்ரோன் கவனம் செலுத்திவருகிறார்.
போருக்கு முன்னரும் பின்னருமான
அவரது பல செயற்பாடுகள் இதனையே
வெளிப்படுத்துவதாக அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
-பாரிஸிலிருந்து குமாரதாஸன்.
28-03-2022