சோமாலியா தற்கொலை தாக்குதலில் 48 பேர் பலி!

0
313

மத்திய சோமாலியாவில் பெண் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்ட தற்கொலை தாக்குதலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 48 ஆக அதிகரித்துள்ளது.

பெலத்வெயானே நகரில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற இந்தத் தாக்கதலில் அரசை கடுமையாக விமர்சித்து வந்த அமீனா முஹமது என்ற எம்.பி கொல்லப்பட்டார். “இரு குண்டுகளில் வியாபாரிகள், மதகுருக்கள், அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட 48 பேர் கொல்லப்பட்டதோடு மேலும் 108 பேர் காயமடைந்தனர்” என்று தாக்குதல் இடம்பெற்ற ஹிர்ஷபெல்லே மாநிலத்தின் தலைவர் அலி குட்லாவே உசைன் பேஸ்புக்கில் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

“முதல் தற்கொலை குண்டுதாரி அமீனா எம்.பியை மற்றும் அவருடன் இருந்தவர்களை இலக்கு வைத்தார். காயமடைந்தவர்களை மருத்துவனைக்கு அழைத்துச் செல்லும்போது, அவர்களை தற்கொலை கார் குண்டு ஒன்று இலக்கு வைத்தது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here