உக்ரைனில் மனிதாபிமான உதவிகளை அளிப்பது தொடர்பில் ஐ.நா பாதுகாப்புச் சபையில் ரஷ்யா கொண்டுவந்த தீர்மானம் தோல்வி அடைந்துள்ளது.
கடந்த புதன்கிழமை இடம்பெற்ற வாக்கெடுப்பில் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக ரஷ்யா மற்றும் சீனா மாத்திரமே வாக்களித்த நிலையில் எஞ்சிய 13 நாடுகளும் வாக்களிப்பை தவிர்த்தன.
ரஷ்யா கொண்டுவந்த இந்தத் தீர்மானத்தில் உக்ரைனில் மனிதாபிமான பிரச்சினைக்கு காரணமாக உள்ள ரஷ்யாவின் படையெடுப்புப் பற்றி எதுவும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.
இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட பாதுகாப்புச் சபையில் வீட்டோ நிராகரிப்பு இன்றி 15 அங்கத்துவ நாடுகளில் ஒன்பது நாடுகளின் ஆதரவு தேவையாக இருந்ததது. ஆனால் வீட்டோ அதிகாரம் பெற்ற அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் நாடுகள் உட்பட பெரும்பாலான நாடுகள் வாக்களிப்பை தவிர்த்தமை குறிப்பிடத்தக்கது.