பிரான்ஸ்: தொற்றுத் தொடர்ந்து அதிகரித்தால் மீண்டும் மாஸ்க் கட்டாயமாக்கப்படும்

0
364

எக்ஸ்டி(XD) கலப்பு வைரஸ் திரிபு
பிரான்ஸில் 40 தொற்றாளர்கள்!

வேட்பாளர் வலெரி பெக்ரெஸுக்கு
தொற்று! தேர்தல் பரப்புரை பாதிப்பு

சில வாரங்களுக்கு முன்னர் கொரோனா
வைரஸ் தொற்றுக்கள் முடிவுக்கு வந்து விட்டதாகக் கருதப்பட்டது.ஆனால் தொற்று எண்ணிக்கையின் சமீப கால அதிகரிப்புகள் கவலைகளைத் தோற்று
வித்துள்ளன.மாஸ்க் அணிவதற்கான கட்டுப்பாடுகள் கடந்த 14 ஆம் திகதி முதல் நீக்கப்பட்டிருந்தாலும் தேவை ஏற்
படின் மீண்டும் அதனைக் கட்டாயமாக்க
வேண்டிய அவசியம் ஏற்படும் என்று
அதிபர் எமானுவல் மக்ரோன் தெரிவித்
திருக்கிறார்.

மார்ச் 14 – 20 ஆம் திகதிக்கு இடைப்பட்ட
காலத்தில் நாட்டில் சுமார் மூன்று மில்லி
யன் வைரஸ் பரிசோதனைகள் (antigen and PCR tests)செய்யப்பட்டுள்ளன.அதற்கு
முந்திய வாரத்தில் அது 2.5 மில்லியனாக
இருந்தது என்பதைச் சுகாதாரப் புள்ளி
விவரங்கள் காட்டுகின்றன.கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் 52 ஆயிரமாக இருந்த நாளாந்தத் தொற்று எண்ணிக்
கை நேற்றுப் புதன்கிழமை ஒரு லட்சத்து
4 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

அதிபர் தேர்தல் பரப்புரைகள் சூடுபிடித்
துள்ள வேளையில் வலதுசாரி ரிப்பப்ளிக்
கன் கட்சியின் வேட்பாளர் வலெரி பெக்
ரெஸ் வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருக்
கிறார்.அதனால் அவர் பிரசாரப் பணி
களை வீடியோ வாயிலாக முன்னெடுத்து வருகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்ரா-ஒமெக்ரோன் இரண்டு திரிபுக
ளினதும் கலப்புத் திரிபு என்று கருதப்
படுகின்ற டெல்ராக்ரோன்( Deltacron)
திரிபு பிரான்ஸில் சுமார் 40 பேருக்குத்
தொற்றியிருப்பது தெரியவந்துள்ளது.

நாட்டின் பொதுச் சுகாதார நிறுவனத்தின்
தகவலின்படி “எக்ஸ்டி”(XD variant) என்று அழைக்கப்படுகின்ற டெல்ரா – ஒமெக்
ரோன் கலப்புத் திரிபு புதியதொரு திரிபு அல்ல என்றும் ஒருவருக்கு இவ்விரு திரிபுகளும் ஒரேசமயத்தில் தொற்று
வதன் மூலமே இரண்டினதும் மரபு கலந்த
பாதிப்பு ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்
படுகிறது.

ஒமெக்ரோன் – டெல்ரா கலப்புத் தொற்றி
னால் நோயாளிகளில் பெரிய பாதிப்பு
கள் அவதானிக்கப்படவில்லை. அதேசம
யம் இவ்விரு வைரஸ்களும் தொடர்ந்தும்
ஐரோப்பிய நாடுகளில் தொற்றி வருகின்றன.

குமாரதாஸன். பாரிஸ்.
23-03-2022

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here