ஜி-20 நாடுகளில் இருந்து ரஷ்யாவை நீக்க முயற்சி!

0
163

ரஷ்யா ஜி20 நாடுகளின் அமைப்பில் தொடர்ந்து இருக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பெரிய பொருளாதார நாடுகளின் அந்த அமைப்பில், ரஷ்யா தொடர்ந்து இருக்கலாமா என்பது குறித்து அமெரிக்காவும் அதன் மேற்கத்திய நட்பு நாடுகளும் ஆராய்ந்து வருகின்றன.

ஆனால் ரஷ்யாவை நீக்குவது அவ்வளவு இலகுவானதல்ல. அந்த அமைப்பில் இருக்கும் மற்ற நாடுகள் ரஷ்யாவை நீக்கும் முயற்சியைத் தடுக்கக்கூடும்.

ஜி20 அமைப்பில், ரஷ்யாவின் நட்பு நாடுகளான சீனா, இந்தியா, சவூதி அரேபியா ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.

ரஷ்யாவை நீக்கினால் அந்த நாடுகள் இவ்வாண்டு நடைபெறும் பேச்சுவார்த்தைகளில் பங்குபெறாமல் புறக்கணிக்கும் சாத்தியம் இருப்பதாகத் தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

ரஷ்யா தொடர்ந்து அந்த அமைப்பில் இருப்பது சரியல்ல என்று அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜெக் சுல்லிவன் கூறுகிறார்.

எனினும் அதுபற்றி மற்ற நாடுகளுடன் பேசிய பின்னரே அதிகாரபூர்வமாக அறிவிக்க முடியும் என்று அமெரிக்கா தெரிவித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here