புதுக்குடியிருப்பில் மலசல கூட தண்ணீர் கானில் தவறி வீழ்ந்து ஒருவயது குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.
புதுக்குடியிருப்பு கைவேலிப்பகுதியைச் சேர்ந்த சியோன்ஷன் என்ற ஒரு வயது குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த குழந்தை இரட்டையர் களில் ஒருவர் என தெரியவருகின்றது.
வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை மலசலகூட தண்ணீர்கானில் விழுந்து உயிரிழந்துள்ளது.
குழந்தை உயிரிழப்பு தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிபதி ரி.சரவணராஜா சம்பவ இடத்திற்கு வருகைதந்து பார்வையிட்டு விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் குழந்தையின் சடலம் மரணவிசாரணைகளின் பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.