இதுவரை 10,500 உக்ரைனியர்கள் பிரான்ஸில் வதிவிடம் பெற்றனர்!

0
239

அணு விபத்து அல்லது தாக்குதல் :
பிரான்ஸில் போதியளவு அயோடின்
கையிருப்பில் – அமைச்சர் தகவல்

போர் தொடங்கியதில் இருந்து இது
வரை 26 ஆயிரம் உக்ரைன் அகதிகள்
பிரான்ஸின் எல்லைக்குள் வருகை
தந்துள்ளனர் என்றும் அவர்களில்
10 ஆயிரத்து 500 பேருக்கு நாட்டில்
வசிப்பதற்கான தற்காலிக அனுமதி
வழங்கப்பட்டிருப்பதாகவும் பிரதமர்
ஜீன் காஸ்ரோ அறிவித்திருக்கிறார்.

2ஆயிரத்து 400 உக்ரைன் சிறுவர்கள்
பாடசாலைகளில் அனுமதிக்கப்பட்டுக்
கல்விச் செயற்பாடுகளில் இணைந்துள்
ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்காலிக வதிவிட அனுமதி பெற்றவர்
களில் 40 வீதமான அகதிகள் பாரிஸ்
பிராந்தியத்தில் தங்கியிருப்பவர்கள்
ஆவர். மேலும் அகதிகள் வருகைதரக்
கூடும் என்பதால் அவர்களுக்காக சுமார்
ஒரு லட்சம் வதிவிட வசதிகள் செய்யப்
பட்டுள்ளன என்று அரசு தெரிவித்துள்
ளது.

இதேவேளை –

பிரான்ஸில் அதன் மக்கள் தொகைக்கு
தேவையான அளவு அயோடின் மாத்தி
ரைகள் கையிருப்பில் இருப்பதாக சுகா
தார அமைச்சர் ஒலிவியே வேரன் தெரி
வித்திருக்கிறார்.ரஷ்யா – உக்ரைன் போ
ரின் விளைவாக அணு ஆயுத மோதல்
பற்றிய அச்சம் அதிகரித்துள்ளதை அடு
த்தே அமைச்சர் இத்தகவலை ஊடகம்
ஒன்றுக்கு வெளியிட்டுள்ளார்.

அணு ஆயுத சம்பவம் ஒன்றினால் ஏற்படு
கின்ற அணுக் கதிரியக்கம் மனிதர்களது உடலில் ஏற்படுத்தக்கூடிய தைரொய்ட் புற்று நோய் (thyroid cancer)ஆபத்தில் இருந்து அயோடின் பாதுகாப்பு வழங்கும் என்பதால் அதனை வாங்கிச் சேமிப்பதில்
பலரும் அக்கறை காட்டி வருகின்றனர்.

அவசர சமயத்தில் நாட்டின் முழுச் சனத்
தொகையினருக்கும் பயன்படுத்துவ
தற்கு 130 மில்லியன் அயோடின் மாத்தி
ரைகள் தேவை என்றும், நாட்டில் 95.7 மில்
லியன் மாத்திரைகளே கையிருப்பில் உள்ளன என்றும் கடந்த ஆண்டின் இறு
தியில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்
றில் தெரியவந்தது. அதனைச் சுட்டிக்
காட்டிக் கேள்வி எழுப்பியபோதே சுகா
தார அமைச்சர் அயோடின் போதியளவு
கையிருப்பில் இருக்கிறது என்பதை
உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியமும் அதன் உறுப்பு
நாடுகளில் அயோடின் மாத்திரைகளின்
கையிருப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

குமாரதாஸன். 22-03-2022
பாரிஸ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here