பிரான்சின் லாச்சப்பல் மாணிக்க பிள்ளையார் ஆலய வருடாந்த தேர்த் திருவிழா!

0
280

பிரான்சின் லாச்சப்பல் பகுதியில் அமைந்துள்ள மாணிக்க பிள்ளையார் ஆலய வருடாந்த தேர்த் திருவிழா 30.08.2015 இன்று  நடைபெற்றது.  இத்திருவிழாவில்    ஐரோப்பிய நாடுகளில் இருந்து பெரும்திரளான மக்கள் கலந்து சிறப்பித்திருந்தமை கண்கொள்ளாக் காட்சியாக அமைந்து இருந்தது.

இவ்விழாவில் பல்லின மக்களும் மிகவும் ஈடுபாட்டுடன் கலந்து கொண்டனர். அத்துடன் லாச்சப்பல் பகுதியில் அமைந்திருந்த சகல வியாபார ஸ்தாபனங்களும் இவ் விழாவில் கலந்துகொண்ட சகல மக்களுக்கும் உணவு மற்றும் குளிர்பானங்களும் வழங்கி சிறப்பித்தனர். இவ் விழாவில் பிரான்ஸ் நாட்டில் உள்ள பாடுமீன் அபிவிருத்தி சங்கம் லாச்சப்பல் பகுதியில் பொது மக்களுக்காக தாகசாந்தி நிலையம் ஒன்றை நிறுவி மோர் மற்றும் அன்னதானம் கொடுத்து சிறப்பித்திருந்தமையானது வரவேற்க வேண்டிய விடயமாகும்.

இவ்வாறான முயற்சிகளில் புலம்பெயர் தேசங்களில் உள்ள எமக்குரிய சங்கங்கள் ஈடுபடுவார்களாயின் அவர்களுக்கும் இது ஒரு புதிய மாற்றமாக இருக்கும்.

487af44019c352cdabe1d139bd0df480c0162b4c 5047147_937-365162-01-02 5047147_945-365298-01-02 5047147_946-365303-01-02

11878947_996695087019149_3330579529251230818_o 11884655_996694637019194_5383449290276365250_o 11921913_1640099636230969_1609906141_n 11947843_996694393685885_2590915603366125222_o IMG_0804 IMG_0812 IMG_0834 IMG_0852 IMG_0868 IMG_0879

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here