தியாகத்தாய் அன்னைபூபதி அவர்களின் 34ஆவது வருட நினைவேந்தல்!

0
300

ஈழத்தில் இந்தியப் படைகளின் தமிழினப் படுகொலைகளுக்கெதிராக உண்ணாவிரம் இருந்து உயிர்நீத்த தியாகத்தாய் அன்னைபூபதி அவர்களின் 34ஆவது வருட நினைவேந்தல் மட்டக்களப்பில் அமைந்துள்ள அன்னை பூபதி அவர்களின் நினைவிடத்தில் நடைபெற்றது.


இந்நினைவேந்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தருமலிங்கம் சுரேஸ் மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர்.
ஈழத்தில் அமைதிப்படை என்ற போர்வையில் ஆக்கிரமிப்புப் படைகளாக வந்து தமிழின அழிப்பைச் செய்துகொண்டிருந்த இந்தியப்படைகளுக்கு எதிராக தமிழ் மக்கள் மீதான அதர்ம யுத்தத்தை நிறுத்துமாறு கோரி 19.03.1988அன்று மட்டக்களப்பில் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த அன்னை பூபதி அவர்கள் 19.04.1988அன்று காலை 7.00மணியளவில் தனது உயிரை தமிழ் மக்களுக்காக தியாகம் செய்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here