இனஅழிப்பு தொடர்பினில் சர்வதேச விசாரணை கோரி குரல் கொடுக்க தொப்புள் கொடி உறவுகள் மற்றும் புலம்பெயர் உறவுகளிற்கு அழைப்புவிடுத்தள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வடமாகாணசகை உறுப்பினருமான கே.சிவாஜிலிங்கம்.
ஊடக அமையத்தினில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பினில் மேலும் அவர் தெரிவிக்கையினில், தொப்புள் கொடி உறவுகள் மற்றும் புலம்பெயர் உறவுகள் குரல் எழுப்புவதின் தொடர்ச்சியாகவே நெருக்குவாரங்களிற்குள்ளான தாயக மக்களும் களமிறங்குவார்கள்.இறுதி யுத்த காலப்பகுதிகளினில் புலம்பெயர் உறவுகளும் தொப்புள் கொடி உறவுகள் எவ்வாறு ஓய்வொழிச்சலின்றி போராடினார்களோ அதே போன்று குரல் கொடுக்கவேண்டும்.
ஒருசிலர் தேவைற்ற விதத்தினில் புலம்பெயர் உறவுகளதும் தொப்புள் கொடி உறவுகளதும் பங்களிப்புக்கள் பற்றி தெரிவித்த கருத்துக்களிற்கு நான் பகிரங்க மன்னிப்பு கோருகின்றேன்.ஆனால் எமது தொடர் போராட்டங்களே ஜ.நா விசாரணை வரை சென்றிருந்ததுஇஅதனால் சோர்வடையாது போராடாவேண்டுமெனவும் சிவாஜிலிங்கம் அழைப்பு விடுத்துள்ளார்.