மக்களின் எதிர்ப்பையடுத்து மகிந்த ராஜபக்ச நல்லூர் கந்தசுவாமி ஆலய வழிபாட்டை இரத்து செய்து இன்று காலை 9.30 மணியளவில் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயம் சென்று வழிபட்டுள்ளார்.
நல்லூரில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளது என வழங்கப்பட்ட தகவலையடுத்து இந்த மாற்றம் செய்யப்பட்டது என்று தெரிவிக்கப்படுகிறது.
மகிந்த ராஜபக்சவின் நல்லூர் ஆலய விஜயத்தை முன்னிட்டு ஆலயச் சூழலில் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் வீதிகளும் மூடப்பட்டு காணப்பட்டது.
ஆலயத்திற்குச் செல்லும் பிரதான வீதிகளான பருத்தித்துறை வீதி கோவில் வீதி என்பன பொலிசாரினால் வழிமறிக்கப்பட்டு மாற்றுப்பாதை ஊடாக பொதுமக்கள் அனுப்பப்பட்டமை
குறிப்பிடத்தக்கது. நல்லூர் கந்தன் ஆலயம் மற்றும் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக சிறிலங்கா காவல்துறையினர் மற்றும் இராணுவத்தின் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதாக அறியமுடிகிறது.
இந்நிலையில் நல்லூருக்காண விஜயம் இரத்து செய்யப்பட்டதை அடுத்து பாதுகாப்புத் தரப்பினர் அங்கிருந்து விலகிச் சென்றனர்.