எதிர்க்கட்சித் தலைவர் பதவி கூட்டமைப்பின் தலைவருக்கே: இலங்கை தமிழரசுக் கட்சி அறிக்கை!

0
120

tnaபுதிய பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் அங்கீகரிக்கப்பட வேண்டும் என இலங்கை தமிழரசுக்கட்சி தெரிவித்துள்ளது. நேற்று அக்கட்சியால் வெளியிடப் பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தமிழரசுக் கட்சியினால் வெளி யிடப்பட்ட ஊடக அறிக்கை வருமாறு, கடந்த ஆகஸ்ட் மாதம் 17-ம் திகதி நடைபெற்ற பாராளுமன்றத் தேர் தலில் ஐக்கிய தேசிய கட்சியானது பாராளுமன்றத்தில் அதிகப்படியான ஆசனங்களை பெற்ற கட்சியாக காணப்படுகின்றது.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்ட மைப்பானது இரண்டாவது அதிகப் படியான ஆசனங்களை பெற்ற கட்சி யாக உள்ளது.
தற்போது ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்ட மைப்பு ஆகிய இரண்டு கட்சிகளி லும் போட்டியிட்டு தெரிவான பாராளு மன்ற உறுப்பினர்கள் அமையவுள்ள தேசிய அரசாங்கத்தின் அமைச்சர வையின் அமைச்சர்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளார்கள் என அறி விக்கப்பட்டுள்ளது.
ஆகவே ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஆகிய இரு கட்சி களும் அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பாளிகளாக உள்ளனர்.
பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் என்ற அடிப் படையில் அமைச்சரவையின் தீர் மானங்களுக்கு வெளிப்படையாக தமது ஆதரவை தெரிவிக்க வேண் டிய கட்டாயத்தில் உள்ளனர்.
இந்த ஆதரவானது பாராளு மன்ற அமர்வுகளில் அரசாங்கத்தோடு வாக்களிப்பதையும் உள்ளடக்கும். எனவே ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பானது எதிர்க்கட்சியில் அமரும் என்ற கூற்றுக்கே இட மில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here