“ஹைப்பர்சோனிக்” ஏவுகணையால் ஆயுதக் கிடங்கை அழித்தது ரஷ்யா!

0
319

மேற்குலகால் வெல்லமுடியாத
புதிய தலைமுறை போராயுதம்!

ரஷ்யா மிக அண்மைக் காலத்தில் அறி
முகப்படுத்திய”ஹைப்பர்சோனிக்” ஏவு
கணைகளை உக்ரைன் போரில் பயன்
படுத்தியதை முதல் முறையாக உறுதிப்
படுத்தியுள்ளது.

உக்ரைன் தலைநகர் கீவில் இருந்து 600
கிலோமீற்றர்கள் மேற்கே இவானோ-
ஃபிராங்கிவ்ஸ்க் (Ivano-Frankivsk) பிராந்
தியத்தில் உக்ரைன் படைகளது ஆயுதக்
கிடங்கு ஒன்றை ஹைப்பர்சோனிக் ஏவு
கணைகளால் தாக்கி அழித்துவிட்டதாக
ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சு சனியன்று
தெரிவித்துள்ளது.

அடுத்த தலைமுறை ஏவுகணை என்று
அதிபர் புடினால் 2018 இல் அறிமுகப்படுத்
தப்பட்டிருந்த “கின்ஷால்” (Kinzhal) எனப்
பெயரிடப்பட்ட ஹைப்பர்சோனிக் ஏவுக
ணைகள் மூலமே அந்தத் தாக்குதல் நடத்
தப்பட்டிருக்கிறது. மிக் போர் விமானங்
கள் மூலம் பயன்படுத்தக் கூடிய இந்த
வான் வழித் தரை இலக்கைத் தாக்கு
கின்ற நீண்ட தூர ஏவுகணைகள் (long-
range air-to-ground missile) ரஷ்யா கடந்த
பத்து ஆண்டுகளுக்குள் தயாரித்த சவால்
மிக்க போராயுதம் ஆகும்.மணிக்கு 6,000 கிலோமீற்றர்களுக்கும் அதிக வேகத்தில்
-ஒலிவேகத்தை விடப் பல மடங்கு அதிக
விரைவில் -பறக்கவல்ல இந்த ஹைப்பர்
சோனிக் ஏவுகணைகளை அமெரிக்கா
உட்பட நேட்டோ படைகளிடம் தற்சமயம்
உள்ள வான் பாதுகாப்புக் கவசங்கள்
(air defense systems) எதனாலும் தடுத்து
விட முடியாது என்று ரஷ்யா கூறுகிறது.
அதேவேளை இந்த ஏவுகணையில்
வழக்கமான குண்டுகளையும் தேவைப்
பட்டால் அணுகுண்டுகளையும் பொருத்த
முடியும்.

இரண்டாயிரம் கிலோ மீற்றர்கள் தாண்டி இலக்குகளைத் தாக்கவல்ல ரஷ்யாவின் “கின்ஷால்”(Kinzhal) அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் பாதுகாப்புச் சவால்களை ஏற்படுத்தியுள்ளன. அமெரிக்க வல்லரசு தனது ஹைப்பர்
சோனிக் ஏவுகணையை 2024 ஆம் ஆண்டு பாவனையில் சேர்ப்பதற்கு
உத்தரவிட்டுள்ளது.

பிரான்ஸின் பாதுகாப்பு அமைச்சர் 2019ஆம் ஆண்டு இராணுவ நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில்
ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளின் பரி
சோதனைகள் கடந்த ஆண்டு இறுதி
யில் நடத்தப்படும் என்பதை அறிவித்தி
ருந்தார். சீனா ஏற்கனவே தனது ஹைப்
பர்சோனிக் ஏவுகணையைக் காட்சிப்
படுத்தியுள்ளது.

(படம் :ஹைப்பர்சோனிக் ஏவுகணை ஒன்
றைச் சுமந்து பறக்கும் மிக் போர் விமானம்.)

            -பாரிஸிலிருந்து குமாரதாஸன்.
                                                     20-03-2022

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here