மக்களின் எதிர்ப்பையடுத்து கந்தரோடை விகாரைக்குச் செல்லும் திட்டத்தை கைவிட்ட மகிந்தா!

0
245

மகிந்த ராஜபக்ச கந்தரோடை விகாரைக்கு வழிபடுவதற்காக செல்லவிருந்த தனது திட்டத்தை கைவிட்டு உள்ளாரென தகவல் வெளியாகியுள்ளது.

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள மகிந்த ராஜபக்ஸ இன்றைய தினம் மத ஸ்தலங்களுக்கு சென்று வழிபாடுகளை மேற்கொண்ட நிலையில் அதன் ஓர் அங்கமாக கந்தரோடை விகாரைக்கும் சென்று வழிபட தீர்மானித்திருந்தார்.

கந்தரோடை விகாரையில் பிரதமர் அடிக்கல் நாட்டுவதாக செய்தி வெளியான நிலையில் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதி மக்களும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் மகிந்த ராஜபக்ச திடீரென கந்தரோடை விகாரைக்கான தனது விஜயத்தை இரத்து செய்தார். இதனையடுத்து அப்பகுதியில் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்த பொலிஸாரும் இராணுவத்தினரும் அங்கிருந்து விலகிச்சென்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here