புதிய அரசியல் யாப்பை உருவாக்குவது தொடர்பில் ஆரம்பகட்ட நடவடிக்கை!

0
185

parliament-1புதிய அரசியல் யாப்பை உருவாக்குவது தொடர்பில் ஆரம்பகட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக குழு ஒன்றை ஸ்தாபிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பான ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அரசியல் யாப்பு தொடர்பான துறைசார்ந்தவர்கள் , அரசியல் நிபுணர்கள், நீதித்துறை விற்பனர்கள் மற்றும் பல்கலைக்கழக பேராசியர்கள் ஆகியோரிடம் இந்த விடயம் தொடர்பில் ஆலோசனைகள் பெற்றப்பட்டுள்ளன.

பாராளுமன்ற கூட்டத் தொடருக்கு பின்னர் அரசியல் யாப்பு தொடர்பான குழு ஒன்றை நியமிக்கவுள்ளதாக அரசியல் யாப்பு தொடர்பான ஜனாதிபதி ஆலோசகர் கலாநிதி ஜயம்பதி விக்ரமரட்ண குறிப்பிட்டுள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகியன இணைந்து முன்னெடுக்கவுள்ள புதிய தேசிய அரசாங்கத்தின் புரிந்துணர்வு உடனக்படிக்கையிலும் புதிய அரசியல் யாப்பு ஒன்றை உருவாக்குவது தொடர்பான விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் ஜயம்பதி விக்ரமரட்ண தெரிவித்துள்ளார்.

புதிய அரசியல் யாப்பை உருவாக்குவதில் மக்களின் கருத்துக்களை கேட்டறிவதோடு வெளிப்படை தன்மையுடன் நடந்து கொள்வதின் முக்கியத்துவம் குறித்தும் ஜனாதிபதி ஆலோசகர்  சுட்டிக்காட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here