படைத் துறைகளுக்கு அதிக முதலீடு
ரிசேர்வ் பிரிவு இரு மடங்காக்கப்படும்
தஞ்சம் கோரலில் மீள் மனுக்களை
குறைத்து திருப்பி அனுப்பும் முறை
வேலை தேடும் “போல் எம்புளுவா”
“France Travail” என்று மாற்றப்படும்
சும்மா இருந்து RSA பெற முடியாது
சிறிய வேலை செய்வது அவசியம்
அதிபர் மக்ரோன் பாரிஸ் ஒபவிலியே
வில் (Docks de Paris, Aubervilliers – Seine
Saint-Denis) அமைந்துள்ள பிரமாண்ட
மான ஒன்று கூடல் மண்டபத்தில் இன்று தனது தேர்தல் வாக்குறுதிகளை வெளி
யிட்டார்.
வெற்றியீட்டினால் அடுத்த ஐந்து ஆண்டு
களில் அனைவருக்கும் தொழில் என்ற
இலக்கே தனது பிரதான வாக்குறுதி
என்பதை மக்ரோன் உறுதிப்படுத்தியுள்
ளார்.அவரது கடந்த ஐந்து ஆண்டு ஆட்சி
காலத்தில் தொழில் இல்லாதவர்களது
வீதம் அதற்கு முந்திய 15 ஆண்டு காலத்
துக்குப் பின்னர் வீழ்ச்சி கண்டுள்ளது.
ஏப்ரல் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள
முதற்சுற்று வாக்கெடுப்பில் அவர் தொட
ர்ந்தும் முதனிலையில் இருப்பதைக் கணிப்புகள் வெளிப்படுத்தி வருகின்
றன.வாக்களிப்பு தினத்துக்கு மிகக் குறு
கிய கால இடைவெளி இருக்கையிலேயே போட்டியிடும் முடிவை வெளியிட்ட அவர், பெரும் பரப்புரைகள்,எதிரணி வேட்பாளர்
களுடனான பொது விவாதங்கள் என்று எதனையும் நடத்த முன்வராமலே தேர்த
லைச் சந்திக்கிறார். முக்கிய வேட்பாளர்
கள் அது குறித்துத் தங்கள் ஆட்சேபனை
களை வெளியிட்டுள்ளனர்.
அத்துடன் உக்ரைன் போர் நெருக்கடி
மக்ரோனின் தேர்தல் நிகழ்ச்சி நிரல்க
ளில் கடைசி நேரத்தில் பெரும் தாமதங்
களையும் குழப்பங்களையும் ஏற்படுத்தி
யுள்ளன.
இன்று அவர் வெளியிட்ட தேர்தல் வாக்கு
றுதிகளில் அவரது அடுத்த ஐந்து ஆண்டு
காலத்துக்கான திட்டத்தில் அடங்கியுள்ள
முக்கிய விடயங்கள் வருமாறு :
🔵புகலிடம் வழங்கும், மறுக்கும் நடைமு
றைகள் மறுசீரமைக்கப்படும். தஞ்சம்
மறுக்கப்பட்டோர் நாடு திரும்ப வேண்டும்
என்பது கோரிக்கையாளர்களது பொறுப்
பாக்கப்படும். அத்தகையோர் மீள மனுச்
செய்யமுடிவது அவர்களை வெளியேற்
றும் நடவடிக்கைகளைத் தாமதமாக்குவ
தால் அந்த விதிகளை மாற்றுவது உட்பட
குடியேற்ற விதிகள் மறுசீரமைப்பு.
🔵தொழில் இழப்புக்கான கொடுப்பனவு,
புதிய தொழில் தேடுவோருக்கான சேவைகள் என்பவற்றை நிர்வகித்து
வரும்”போல் எம்புளுவா” (Pôle emploi)
மறுசீரமைக்கப்பட்டு “France Travail” என்ற
பெயருக்கு மாற்றப்படும்.
🔵நீண்ட காலத் தொழிலாளர்களது ஓய்வு
பெறும் வயது எல்லை 62 இல் இருந்து 65
ஆக உயர்த்தப்படுகிறது.ஓய்வூதியத்
தொகை குறைந்தது 1,100 ஈரோக்களாக
நிர்ணயிக்கப்படும்.
🔵வருமானங்கள் எதுவும் இல்லாத நிலையில் இருக்கும் 25 வயதுக்கு மேற்
பட்டவர்களுக்கு வழங்கப்பட்டுவருகின்ற RSA என்கின்ற மாதாந்த அரச நிதிஉதவிக் கொடுப்பனவு (Revenu de solidarité active) பெறுவதற்கு வாரத்தில் 15-20 மணித்தி
யாலங்கள் ஏதாவது பணியில் அல்லது
தொழில் பயிற்சியில் ஈடுபடவேண்டும் என்பது கட்டாயமாக்கப்படும்.
🔵நாட்டின் பாதுகாப்புத் துறைக்கான
நிதி ஒதுக்கீடுகள் மேலும் அதிகரிக்கப்
படும். குறிப்பாகப் படைத் துறைகளுக்கு நவீன தொழில்நுட்ப வசதிகளை மேம்ப
டுத்துவதற்கு அதிக நிதி வசதி அளிக்கப்
படும். தீவிரமான போர்களை எதிர்கொள்
கின்ற நிலைமை திரும்பியிருப்பதால்
நாட்டின் ரிசேர்வ் படையின் எண்ணிக்கை
இரண்டு மடங்காக அதிகரிக்கப்படும்.
🔵ஆசிரியர்களது மாதாந்த ஊதியத்தை
மிகச் சிறந்த தரத்துக்கு மாற்றுதல். நிர்
வாகச் செயற்பாடுகளில் பாடசாலைக
ளுக்கு அதிக சுதந்திரம், பாடசாலைக
ளோடு குடும்பங்களை மிக நெருக்கமாக்
குவதற்கான புதிய திட்டங்கள்.பள்ளிகளி
லும் இணைய வழியிலும் நடத்தப்படும்
துன்புறுத்தல்களில் இருந்து மாணவர்
களைப் பாதுகாக்கும் விதமான சூழலை உறுதிப்படுத்துதல்.
குமாரதாஸன். பாரிஸ்.
17-03-2022