கொழும்பு வெள்ளவத்தைப் பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற தொடருந்து விபத்தில் மட்டக்களப்பைச் சேர்ந்த சிவலிங்கம் நிரோஷன் (வயது 27) என்ற இளைஞர் உயிரிழந்துள்ளதாக வெள்ளவத்தைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பில் இருந்து கொழும்பு வெள்ளவத்தையில் உள்ள உறவினர் ஒருவரின் திருமண வீட்டுக்கு குடும்பத்தாருடன் சென்ற இவர்,வெள்ளிக்கிழமை மாலை வேளையில் தனது நேரத்தினை பொழுது போக்காக கழிக்கும் பொருட்டு தொலைபேசியில் உரையாடிக்கொண்டு தொடருந்து தண்டவாளத்தின் ஊடாக நடந்து சென்றுள்ளார்.
தொடருந்து இவரை மோதியுள்ளது. தூக்கி வீசப்பட்ட இவர் பாரதூரமான உட்காயங்களுக்குள்ளாகி அதிகளவு இரத்தப்போக்கு ஏற்பட்டு ஸ்தலத்திலேயே உயிரிழந்தள்ளார்.
மேலும் இச்சம்பவம் தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வீதியைச் சேர்ந்த இவர் ஒரு குறுந்திரைப்படக் கலைஞர் என்றும் ஏற்கனவே சில குறுந்திரைப்படங்களைத் தயாரித்து வெளியிட்டவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.